Published:Updated:

நாடாளுமன்றத்தில் ராகுல் Vs மோடி... மக்களிடம் கவனம் ஈர்த்தது யாருடைய உரை?!

மோடி - ராகுல்

சமீபத்தில் பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தியின் தெறி பேச்சும், அதற்கு பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த பதிலடியும் வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. மக்களவையுடன் நிற்காமல், மாநிலங்களவையிலும் ராகுலுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ராகுல் Vs மோடி... மக்களிடம் கவனம் ஈர்த்தது யாருடைய உரை?!

சமீபத்தில் பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தியின் தெறி பேச்சும், அதற்கு பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த பதிலடியும் வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. மக்களவையுடன் நிற்காமல், மாநிலங்களவையிலும் ராகுலுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்துள்ளார்.

Published:Updated:
மோடி - ராகுல்

மீண்டும் காங்கிரஸ் மீது பாய்ந்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, பா.ஜ.க-வையும் பிரதமர் மோடியையும் சரமாரி தாக்கினார். மறுநாள் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, ராகுல் காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல், காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சித்தார். அதற்கு அடுத்த நாள், மாநிலங்களவையில் பேசியபோதும், காங்கிரஸையும் ராகுலையும் நேருவையும் கடுமையாக மோடி விமர்சித்தார்.

ராகுல்
ராகுல்

காங்கிரஸையும் ராகுல் காந்தியையும் நேருவையும் கடுமையாக மோடி விமர்சித்திருக்கிறார் என்றால், அந்தளவுக்கு ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உரை காரசாரமாக இருந்தது. “மக்களின் கருத்தைக் கேட்காமல் சர்வாதிகார அரசர்போல உங்கள் அரசு செயல்படுகிறது. மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமல், இந்தியாவை ஓர் அரசு ஆட்சி செய்ய முடியாது. இந்தியா ஒரு ராஜ்ஜியமல்ல... நீங்கள் ராஜாவும் அல்ல. இதை மறந்துவிடாதீர்கள்” என ராகுல் காந்தி முன்வைத்த கருத்தும் அவர் பேசிய விதமும் பிரதமர் உள்ளிட்ட பா.ஜ.க-வினரை கடுமையாக பாதித்திருக்கிறது என்பதை பிரதமரின் கடுமையான எதிர்வினையில் பார்க்க முடிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராகுல் மற்றும் மோடி ஆகியோருடைய உரைகளின் வீச்சு குறித்து இரு தரப்பினரிடமும் கேட்டோம். பா.ஜ.க-வின் மாநில செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசியபோது,

நாராயணன்
நாராயணன்

“தமிழகத்தை வைத்து இந்தியாவைப் பிரிக்க நினைக்கிறார் ராகுல். தமிழகத்தை வைத்து இந்தியாவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நினைக்கிறார். தமிழக மக்களை முட்டாள்களாக ராகுல் நினைக்கிறார். தமிழக மக்கள் இந்த நாட்டின் முப்படைத் தளபதிக்கு செய்த மரியாதையை உணர்ந்து, தமிழக மக்கள் தேசியத்தின் பக்கம் இருக்கிறார்கள் என்கிறார் மோடி. இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்றால் என்னவென்று தெரியாமல் ராகுல் பேசுகிறார். இந்திய அரசியல் சட்டமே நம்முடைய வேதப்புத்தகம் என்கிறார் மோடி” என்றார் நாராயணன் திருப்பதி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், “தமிழகத்தை நீங்கள் ஆள முடியாது என்று ராகுல் பிரிவினைவாதம் பேசுகிறார். ஆனால், இன்றைக்கு இந்தியா முழுவதையும் நாங்கள்தான் ஆண்டுகொண்டிருக்கிறோம் என்பதை மோடி உணர்த்தியிருக்கிறார். பிரிவினைவாதத்துக்கு மெருகூட்டும் அளவுக்கு ராகுல் பேசியிருக்கிறார். பிரிவினைவாதத்தை நாம் உடைத்தெறிவோம் என்று மோடி பேசியிருக்கிறார்.

மோடி
மோடி

ஏழு வருடங்களாக ஆட்சியும் அதிகாரமும் இல்லாத காரணத்தால், இந்தியா என்கிற வலுவான குடியரசு நாட்டை, ஏதோ தனது ராஜ்ஜியத்தின் கீழ் இருக்கும் நாடு என்பது போன்ற தோரணையுடன் ராகுல் பேசியிருக்கிறார். ஆனால், இந்தியா எப்படிப்பட்ட தேசம் என்பதை மிகமிகத் தெளிவாக உணர்த்தியதுடன், பாரதியார் பாடல் உள்பட பல்வேறு அம்சங்களைக் குறிப்பிட்டு காங்கிரஸுக்கு உரைக்குமாறு மோடி பேசியிருக்கிறார்” என்றார் நாராயணன் திருப்பதி.

``ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உரை முக்கியமான பல அம்சங்களைக் கொண்டிருந்தது. அவரின் உரை தான் மக்கள் மத்தியில் வெகுவாக சென்றடைந்தது. குறிப்பாக, தமிழ்நாட்டில் ராகுலின் உரைக்கு பெரும் வரவேற்பு இருந்தது. ஆனால், ராகுலுக்கு பதில் சொல்லும் வகையில் பிரதமர் மோடி பேசிய பேச்சு ஏற்புடையதாக இல்லை” என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணன். ராகுல், மோடி இருவரின் உரை குறித்து பேராசிரியர் அருணன் நம்மிடம் விரிவாகப் பேசினார்.

``உங்கள் வாழ்நாளில் தமிழ்நாட்டு மக்களை ஒருபோதும் நீங்கள் ஆள முடியாது என்பது ராகுல் உரையின் முக்கியமான ஓர் அம்சம். நம் நாடு மாநிலங்களின் ஒன்றியம். ஒவ்வொரு மாநிலத்தின் உணர்வை, உரிமையை, தனித்தன்மையை மதிக்க வேண்டும் என்பது அவரது உரையின் இன்னொரு முக்கியமான அம்சம்.

உங்களால் ஒருபோதும் தமிழகத்தை ஆள முடியாது என்ற ராகுலின் கருத்துக்கு பதில் சொல்ல முயற்சி செய்த பிரதமர் மோடி, ‘1967-ல் தமிழகத்தில் தோற்றுப்போன காங்கிரஸ், அதன் பிறகு அங்கு ஆட்சிக்கு வர முடியவில்லை’ என்று கூறியிருக்கிறார். அதற்கடுத்து, ‘ஆனாலும் காங்கிரஸின் அகங்காரம் குறையவில்லை’ என்கிறார் மோடி.

அருணன்
அருணன்

ராகுல் காந்தி அகங்காரத்தில் பேசவில்லை. அனுபவத்தில் பேசுகிறார். 1967 -க்கு பிறகு எங்களால் தமிழகத்தில் ஆட்சிக்கு வர முடியவில்லை என்பதை ராகுல் காந்தி சொல்லாமல் சொல்கிறார். தமிழர்களின் உரிமையைப் பறிப்பதால் உங்களாலும் தமிழகத்தில் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என்று சொல்கிறார். நீட் தேர்வுக்கு தமிழகம் விலக்கு கேட்கும் விவகாரத்தை வைத்துத்தான், அதை ராகுல் பேசினார். நீட் தேர்விலிருந்து தமிழ்நாடு விலக்கு கேட்கிறது. அதைக் கொடுங்கள் என்று ராகுல் சொல்கிறார். அதற்கு மோடியின் உரையில் எந்த பதிலும் இல்லை.

மாநிலங்களின் உரிமையைப் பற்றி ராகுல் பேசினால், ‘காங்கிரஸ் பிரிவினைவாதம் பேசுகிறது’ என்கிறார் மோடி. காங்கிரஸ் கட்சிக்கு நாட்டின் ஒற்றுமை மீது அக்கறை இல்லை என்று மோடி பேசுகிறார். காங்கிரஸ் கட்சிதான் இந்த நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடியது. காங்கிரஸுக்குள் இருந்துதான் கம்யூனிஸ்ட்களாகிய நாங்களும் சுதந்திரத்துக்காகப் போராடினோம். அந்த கட்சியைப் பிரிவினைவாதம் பேசும் கட்சி என்று மோடி சொல்கிறார்.

தமிழ்நாட்டு மக்களைப் புகழ்வதற்காக மகாகவி பாரதியின் பாடலை மோடி குறிப்பிடுகிறார். குடியரசு தின அணிவகுப்பில் பாரதிக்கு இடமில்லை என்று மறுத்துவிட்டு, பாரதியின் பாடலைப் பற்றி மோடி பேசுவது விந்தையிலும் விந்தையாக இருக்கிறது.

மோடி, ராகுல்
மோடி, ராகுல்

இங்கு இரண்டு இந்தியாக்கள் உள்ளன. ஒன்று, செல்வந்தர்களின் இந்தியா. இன்னொன்று, ஏழைகளின் இந்தியா. இரண்டு இந்தியாக்களாக நாட்டைப் பிளவுபடுத்தும் வேலையை மோடி அரசு தீவிரமாகச் செய்கிறது என்பதை ராகுல் தெளிவாக எடுத்துவைத்தார். அதற்கு மோடி பதிலே சொல்லவில்லை. மாறாக, ஏழைகளெல்லாம் லட்சாதிபதிகளாகிவிட்டனர் என்று ஒரே போடாகப் போடுகிறார் மோடி. இதைக் கேட்டு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை” என்கிறார் அருணன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism