Published:Updated:

`பஞ்சாப் முதல் டெல்லி வரை..!’ - வேளாண் சட்டங்களுக்கு எதிராக கிசான் யாத்ரா செல்லும் ராகுல் காந்தி

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டத்தைக் கொண்டு செல்லவும் ராகுல் காந்தி டிராக்டர் பேரணியில் ஈடுபடவிருக்கிறார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தச் சட்டங்களை ஏற்க மாட்டோம் என விவசாயிகள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். மத்திய பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலி தளம், இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்விதமாக அமைச்சரவையிலிருந்து விலகியதுடன், கூட்டணியிலிருந்தும் வெளியேறியது.

சுக்பீர் சிங் பாதல்
சுக்பீர் சிங் பாதல்

என்றாலும், மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து, `இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவான சட்டங்கள்’ எனக் கருத்து தெரிவித்துவந்தது. இந்தநிலையில், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டத்தைக் கொண்டுசெல்லவும் ராகுல் காந்தி டிராக்டர் பேரணியில் ஈடுபடவிருக்கிறார். இந்தத் தகவலை அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டிருக்கிறார்.

`வேளாண் சட்டங்கள் மட்டுமே காரணம் அல்ல!’- பா.ஜ.க-வுடன் 24 வருட கூட்டணி, வெளியேறியது சிரோமணி அகாலிதளம்

கே.சி.வேணுகோபால் இது தொடர்பாகக் கூறுகையில், ``மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க-வால் தடுத்து நிறுத்த முடியாது. வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வலியுறுத்தி, பஞ்சாப் முதல் டெல்லி வரை ராகுல் காந்தி `கிசான் யாத்ரா’ என்ற பயணத்தை மேற்கொள்வார்” என்றார். இந்த யாத்திரை வரும் 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தைப் பார்க்கச் சென்ற ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் 144 தடை உத்தரவைக் காரணம் காட்டி தடுத்து நிறுத்தப்பட்டதுடன், கைதும் செய்யப்பட்டனர். இருவரின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்,

உ.பி பாலியல் வன்கொடுமை: `என்னை போலீஸார் தரையில் தள்ளினர்...!’ - ஹத்ராஸ் செல்லும் வழியில் ராகுல் கைது    #NowAtVikatan
அடுத்த கட்டுரைக்கு