Published:Updated:

விஜயபாஸ்கர்: சோதனைக்குள்ளாகும் 4-வது முன்னாள் அமைச்சர்! - 43 இடங்களில் ரெய்டு, வழக்கு பதிவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணியைத் தொடர்ந்து 4-வதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான, அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான வீடு, அவர் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டுவருகிறார்கள். கடந்த அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராகச் செயல்பட்டுவந்தவர் விஜயபாஸ்கர். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரிலுள்ள விஜயபாஸ்கருக்குச் சொந்தமான வீடு உள்ளிட்ட 29 இடங்களிலும், கோவை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி என மொத்தம் 43 இடங்களிலும் ரெய்டு நடைபெற்றுவருகிறது.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

லஞ்ச ஒழிப்புத்துறை, விஜயபாஸ்கர் மீதும், அவரின் மனைவி மீதும் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்திருப்பதாக வழக்கு பதிவும் செய்திருக்கிறது. லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்திருக்கும் வழக்கில், அவருக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டுகளை நடத்திவருகிறது. அந்த வகையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணியைத் தொடர்ந்து 4-வதாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்குச்ச் சொந்தமான, அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு