Published:Updated:

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு பதிவு!

கோவை எஸ்.பி.வேலுமணி வீடு
கோவை எஸ்.பி.வேலுமணி வீடு

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரைத் தொடர்ந்து தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்திவருகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை செய்துவரும் நிலையில், தமிழகத்தில் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான சிலரின் வீடுகள் உட்பட 52 இடங்களில் சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சென்னையில் மட்டும் 15 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. அரசு ஒப்பந்தப் பணிகள் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.2 கோடி மோசடி செய்துவிட்டதாக எஸ்.பி.வேலுமணி மீது திருவேங்கடம் என்பவர் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

வேலுமணி
வேலுமணி

தொடர்ந்து சோதனை நடைபெற்றுவரும் நிலையில் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே குனியமுத்தூர் சுகுணாபுரம் இல்லத்தில் அ.தி.மு.க ஆதரவாளர்கள் தி.மு.க அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிவருகின்றனர்.

வழக்கு பதிவு
வழக்கு பதிவு

ஏற்கெனவே சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு