Published:Updated:

"யாகம் நடந்த இடங்களில் உடனடியாக மழை பொழிந்ததே..!" - வேலுமணி சிறப்புப் பேட்டி

ஜெயலலிதா வழியில் ஆட்சி செய்வதால்தான், இப்போதும்கூட நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில், 'மழைநீர்ச் சேகரிப்பு' விளம்பரப் படத்தை வெளியிட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம்.

sp velumani
sp velumani

'இதுவும் கடந்துபோகும்' என்ற சமாளிப்போடு ஒருபக்கம் 'மழை வேண்டி யாகம்' நடத்திக்கொண்டே இன்னொரு பக்கம் 'செயற்கை மழை பெய்ய வைப்பதற்கான ஆய்வை'யும் நடத்திக்கொண்டிருக்கிறது எடப்பாடியார் அரசு. 'விதியே விதியே தமிழச் சாதியை என்செய நினைத்தாய்...' என்ற சிந்தனையோடே உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியைச் சந்தித்தேன். http://bit.ly/2MJxbsB

"குடிதண்ணீரைத் தேடி இரவும் பகலுமாக மக்கள் குடங்களைத் தூக்கிக்கொண்டு அலைந்து திரிகிறார்கள். ஆனால் நீங்களோ, 'தண்ணீர்ப் பஞ்சம் என்பது வதந்தி' என்கிறீர்களே?"

"அப்போது நான் சொல்லவந்தது வேறு. ஆனால், எதிர்க்கட்சியினர் வேறு மாதிரியாகத் திரித்துச் செய்தி பரப்பிவிட்டார்கள். 'தண்ணீர்ப்பஞ்சம் கிடையாது, தண்ணீர்த் தட்டுப்பாடுதான் இருக்கிறது' என்று சொன்னேன். கடந்த 2017-ம் ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டபோது, சென்னைக்கு 450 எம்.எல்.டி தண்ணீர் சப்ளை செய்தோம். தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவிவரும் இந்தச் சூழலிலும்கூட, தற்போது 525 எம்.எல்.டி தண்ணீர் சப்ளை செய்துவருகிறோம். நீண்ட நாள்களாக மழை பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. இதுதான் தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்குக் காரணம்.'' முழுமையான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2MJxbsB

யாகம் நடத்தினாலும் மழை வருகிறது, இயற்கையாகவும் மழை வருகிறது. எப்படி வந்தாலும் அந்த மழைநீரைச் சேமித்துவைத்துப் பயன்படுத்த வேண்டும்

"ஜெயலலிதா வழியில் ஆட்சி செய்கிறோம் எனச் சொல்கிற அ.தி.மு.க அரசு, அவர் கொண்டுவந்த 'மழைநீர்ச் சேகரிப்புத் திட்டத்தை' கிடப்பில் போட்டுவிட்டதால்தானே இந்த நிலை?''

"ஜெயலலிதா வழியில் ஆட்சி செய்வதால்தான், இப்போதும்கூட நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கும் நோக்கில், 'மழைநீர்ச் சேகரிப்பு' விளம்பரப் படத்தை வெளியிட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். அடுத்ததாக, 'இன்னும் மூன்று மாதங்களுக்குள் அனைத்துக் கட்டடங்களிலும் மழைநீர்ச் சேகரிப்பை நிறுவ வேண்டும். இல்லையெனில், நோட்டீஸ் வழங்கி சம்பந்தப்பட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரிக்கையும் செய்திருக்கிறோம்.''

"மழைநீரைச் சேகரித்தால், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பது சரி. ஆனால், மழை வேண்டி யாகம் நடத்துகிறீர்களே... மழை வந்ததா?''

"அதில் எங்களுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற அறிஞர் அண்ணாவின் கொள்கைவழி வந்தவர்கள் நாங்கள். எங்கள் தலைவி ஜெயலலிதாவே கடவுள் நம்பிக்கை உள்ளவர்தானே. அதனால், 'யாகம் வளர்த்தால் மழை வரும்' என்ற நம்பிக்கையை முதல்வரிடம் எடுத்துச் சொன்னோம். இதையடுத்தே தமிழகம் முழுவதும் உள்ள பெரிய கோயில்களில் யாகம் நடத்தப்பட்டது. அப்படி யாகம் நடத்தப்பட்ட இடங்களில் உடனடியாக மழையும் பொழிந்ததே..!''

"யாகம் நடத்தினாலே மழை வரும் என்றால், மழை நீரைச் சேமிக்கச் சொல்லி விளம்பரப் படம் வெளியிடுவது ஏன்?''

sp velumani
sp velumani

`"அப்படியில்லை... யாகம் நடத்தினாலும் மழை வருகிறது, இயற்கையாகவும் மழை வருகிறது. எப்படி வந்தாலும் அந்த மழைநீரைச் சேமித்துவைத்துப் பயன்படுத்த வேண்டும் என்ற உயரிய சிந்தனையில்தான் ஜெயலலிதாவே மழைநீர்ச் சேகரிப்புத் திட்டத்தை 2001 -2006 காலகட்டத்திலேயே கொண்டுவந்தார். அற்புதமான இந்தத் திட்டத்தால், அப்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததோடு, நீரின் சுவையும் கூடியது. தற்போது சென்னையில் மட்டும் எட்டு லட்சம் மழைநீர்ச் சேகரிப்பு அமைப்புகள் இருக்கின்றன. அவற்றை மேம்படுத்துவதோடு, மேலும் இரண்டு லட்சம் புதிய மழைநீர்ச் சேகரிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கிலும்தான் முதல்வரின் வழிகாட்டுதலின்படி விழிப்புணர்வுப் பிரசாரம் செய்துவருகிறோம்.''

- ஆளும் கட்சியை பா.ஜ.க-தான் இயக்குகிறதா? ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில்? அடுக்கடுக்கான ஆதாரங்களை அறப்போர் இயக்கம்... - இந்தக் கேள்விகளுக்கு வேலுமணி அளித்துள்ள விரிவான பதில்களுக்கு, ஆனந்த விகடன் இதழில் வெளியாகியுள்ள அவரது பேட்டியை முழுமையாக வாசிக்க > "எடப்பாடியையும் பன்னீரையும் சேர்த்து வைத்தேன்!" https://www.vikatan.com/government-and-politics/politics/exclusive-interview-with-minister-spvelumani

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/