Published:Updated:

`மழைநீரை சேமிப்போம்... நமக்காக, நாட்டுக்காக!' - எஸ்.பி.வேலுமணியின் #RainWaterChallenge

ஒரு துளி மழைநீர்கூட வீணாகக் கூடாது. இதை நாம் ஒரு சவாலாக எடுத்து நிறைவேற்ற வேண்டும்.

எஸ்.பி. வேலுமணி
எஸ்.பி. வேலுமணி

இந்தக் கோடைக்காலத்தை சென்னை உட்பட தமிழக மக்கள் யாராலும் மறக்க முடியாது. வேறு மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் தண்ணீரைக் கடன் பெற்ற அவலமும் இக்கோடைக்காலம் தந்ததே. அதற்கு ஈடாக இயற்கை தரும் அன்புப் பரிசாகத் தமிழகத்தில் பரவலாக மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக, மேற்குத்தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் மழைச்சாரலுடனே பொழுது விடிகிறது.

இந்நிலையில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்து வரும் எஸ்.பி.வேலுமணி, இன்று காலை தன்னுடைய ட்விட்டர் இயங்குதளத்தில் மழை நீர் சேகரிப்பை முன்னிறுத்தி தான் பேசும் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், "200 சதுரடி கொண்ட ஒரு வீட்டில் முறையாக மழை நீரை சேமித்தோம் என்றால், ஒரு குடும்பத்ததுக்கு ஒரு வருடத்துக்குத் தேவையான நீரை பூர்த்தி செய்யலாம். தமிழக மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் மழை நீரை சேமிக்க வேண்டும்.

`மழைநீரை சேமிப்போம்... நமக்காக, நாட்டுக்காக!'  - எஸ்.பி.வேலுமணியின் #RainWaterChallenge

ஒரு துளி மழைநீர்கூட வீணாகக் கூடாது. இதை நாம் ஒரு சவாலாக எடுத்து நிறைவேற்ற வேண்டும். மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தோரும் மக்கள் மேல் அக்கறை உள்ளோரும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்த்த வேண்டும்" என்று வேண்டுகிறார்.

#RainWaterChallenge என்ற ஹேஸ்டேக் மூலம் மழை நீர் சவால் என்ற இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.