Published:Updated:

``அமைச்சர் சாதியைச் சொல்லி திட்டலை!'' - ராஜகண்ணப்பன் ஆதரவாளர்கள் விளக்கம்

ராஜகண்ணப்பன்

அமைச்சர் ராஜகண்ணப்பன் பி.டி.ஓ ஒருவரைச் சாதியைச் சொல்லி திட்டியதாகக் கூறப்படும் நிலையில், அவர் ஆதரவாளர்கள் இந்த விவகாரத்தில் புது விளக்கம் கொடுத்திருக்கின்றனர்.

``அமைச்சர் சாதியைச் சொல்லி திட்டலை!'' - ராஜகண்ணப்பன் ஆதரவாளர்கள் விளக்கம்

அமைச்சர் ராஜகண்ணப்பன் பி.டி.ஓ ஒருவரைச் சாதியைச் சொல்லி திட்டியதாகக் கூறப்படும் நிலையில், அவர் ஆதரவாளர்கள் இந்த விவகாரத்தில் புது விளக்கம் கொடுத்திருக்கின்றனர்.

Published:Updated:
ராஜகண்ணப்பன்

போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், முதுகுளத்தூர் பி.டி.ஓ ராஜேந்திரனைச் சாதியைச் சொல்லித் திட்டினார் என்ற தகவல் காட்டுத்தீபோலப் பரவி, கண்ணப்பனின் இலாகா மாறும் நிலை வரை கொண்டுவந்துவிட்டுள்ளது. அப்படி சாதியைச் சொல்லி அமைச்சர் திட்டவில்லை என்கிறார்கள் ராஜகண்ணப்பனின் ஆதரவாளர்கள்.

இது தொடர்பாக அவர்களிடம் பேசினோம். ``அமைச்சர் மீதான குற்றச்சாட்டு உண்மையா என்று விசாரித்தபோது, பி.டி.ஓ ராஜேந்திரன் குறித்தும் விசாரிக்கத் தொடங்கினோம். முதலில் கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றினார். அப்போது ஒன்றிய சேர்மனுக்கும், ராஜேந்திரனுக்கும் மோதல்கள் நடத்திருக்கின்றன. அங்கும் சேர்மன் சாதியைச் சொல்லித் திட்டியதாகப் புகார் கிளப்பி, அங்கிருந்து திருவாடாணை ஊராட்சி ஒன்றியத்துக்கு அசிஸ்டன்ட் பி.டி.ஓ-வாக மாற்றலானார் ராஜேந்திரன்.

ராஜகண்ணப்பன்
ராஜகண்ணப்பன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அங்கிருந்து பி.டி.ஓ-வாகப் பதவி உயர்வு பெற்று, முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். ரெகுலர் பி.டி.ஓ அன்புக்கண்ணன் என்பவர் மூலம் தி.மு.க ராமநாதபுரம் மாவட்டப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அறிமுகம் கிடைத்துள்ளது ராஜேந்திரனுக்கு. தி.மு.க கவுன்சிலர்கள் ஜெயித்திருந்தபோதும், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியை அ.தி.மு.க கைப்பற்றியது. காதர்பாட்சா தயவில்லாமல் இது நடந்திருக்காது என்று ஏற்கெனவே தலைமைக்குப் புகார் போயிருக்கிறது.

பி.டி.ஓ ராஜேந்திரன்
பி.டி.ஓ ராஜேந்திரன்

தி.மு.க கட்சிக்காரர்கள் ஒரு வேலைக்காகச் சென்றால், பி.டி.ஓ ராஜேந்திரன் உள்ளிட்ட எவரும் மதிப்பதில்லை. அதனால், பி.டி.ஓ ராஜேந்திரனை அமைச்சர் ஒருமுறை கண்டித்துள்ளார். எங்கே தன்னை டிரான்ஸ்ஃபர் செய்துவிடுவார்களோ என்று அஞ்சிய பி.டி.ஓ ராஜேந்திரன், காதர்பாட்சாவின் உதவியை நாடியிருக்கிறார். காதர்பாட்சாவுக்கு ஏற்கெனவே அமைச்சராக வேண்டும் என்கிற கனவு இருந்தது. அது தகர்ந்துவிட்டதால் எப்படியும் கண்ணப்பனை அமைச்சர் பதவியிலிருந்து தூக்கிவிட வேண்டும் என முயன்றார்.

மார்ச் 27-ம் தேதி அமைச்சரைக் காண வந்த பி.டி.ஓ ராஜேந்திரனை டிரான்ஸ்ஃபர் செய்துவிடுவேன் என்றுதான் எச்சரித்தார் கண்ணப்பன். சாதியைச் சொல்லித் திட்டவில்லை. காதர்பாட்சாதான் பி.டி.ஓ ராஜேந்திரனை அப்படிச் சொல்லவைத்து, பிரச்னையாக்கி, இலாகா மாற்றம்வரை கொண்டுவந்துவிட்டார்” என்றனர்.

வேல்ராமன்
வேல்ராமன்

இது பற்றி தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த வேல்ராமன் என்பவர் முதுகுளத்தூரில் பேட்டி கொடுத்தார். அதில், “நான் சாலை ஒப்பந்ததாரராக இருக்கிறேன். ஒரு டெண்டர் விஷயமாக அமைச்சர் ராஜகண்ணப்பனைப் பார்க்கச் சென்றேன். அப்போது முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர், மேற்கு ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட சிலரும் அமைச்சர் அறையில் இருந்தனர். அச்சமயம் அமைச்சரைக் காண வந்த பி.டி.ஓ ராஜேந்திரனிடம், ‘கட்சிக்காரங்க சொல்றதை செய்ய மாட்டீங்களா... சேர்மன் சொல்றதைத்தான் செய்வீங்களா?’ என்று திட்டினார். பி.டி.ஓ ராஜேந்திரனால் பதில் பேச முடியாததால், ‘உன்னை டிரான்ஸ்ஃபர் செய்துவிடுகிறேன்’ என்றுதான் சொன்னார். மற்றபடி வேறு எதுவும் சொல்லவில்லை” என்றார்.