Published:Updated:

காங்கிரஸ்: ``32 ஆண்டுகளில் காந்தி குடும்பத்திலிருந்து யாரும் பிரதமராகவில்லையே...” - அசோக் கெலாட்

அசோக் கெலாட்

``கடந்த 32 ஆண்டுகளில் காந்தி குடும்பத்திலிருந்து யாரும் பிரதமராகவோ, மத்திய அமைச்சராகவோ, முதல்வராகவோ ஆகவில்லை." - அசோக் கெலாட்

காங்கிரஸ்: ``32 ஆண்டுகளில் காந்தி குடும்பத்திலிருந்து யாரும் பிரதமராகவில்லையே...” - அசோக் கெலாட்

``கடந்த 32 ஆண்டுகளில் காந்தி குடும்பத்திலிருந்து யாரும் பிரதமராகவோ, மத்திய அமைச்சராகவோ, முதல்வராகவோ ஆகவில்லை." - அசோக் கெலாட்

Published:Updated:
அசோக் கெலாட்

மார்ச் மாதம் நடைபெற்ற ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், ஐந்து மாநிலங்களிலுமே காங்கிரஸ் தோல்வியடைந்ததையடுத்து, கட்சிக்குள் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும், கபில் சிபல் உட்பட சில முக்கியத் தலைவர்களும் காங்கிரஸிலிருந்து விலகினர். கட்சியின் இடைக்காலத் தலைவராக தற்போது சோனியா காந்தி இருந்துவரும் நிலையில், செப்டம்பரில் கட்சியின் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்தப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
ட்விட்டர்

மேலும், கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல் காந்தியே தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. கட்சியின் செயல்மட்டத்திலிருந்து அதிகாரபூர்வ செய்திகள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும்கூட, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் பேச்சு கிட்டத்தட்ட அதை உறுதிசெய்வதாக இருக்கிறது.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

இது குறித்து நேற்றுப் பேசிய அசோக் கெலாட், ``ராகுல் காந்தியே மீண்டும் தலைவராவதற்கு, ஒருமித்த கருத்தோடு கட்சி ஆதரவாக இருக்கிறது. எனவே, இதை அவர் ஏற்க வேண்டும் என்று நினைக்கிறேன். மேலும், இது காந்தி, காந்தி அல்லாத குடும்பத்தைப் பற்றியது அல்ல. அதோடு யாரும் இதில் பிரதமராகவில்லை. கடந்த 32 ஆண்டுகளில் காந்தி குடும்பத்திலிருந்து யாரும் பிரதமராகவோ, மத்திய அமைச்சராகவோ, முதல்வராகவோ ஆகவில்லை.

கெஜ்ரிவால் - மோடி
கெஜ்ரிவால் - மோடி

பிறகு ஏன் மோடி, இந்தக் குடும்பத்தைக் கண்டு பயப்படுகிறார்... கடந்த 75 ஆண்டுகளில் நாட்டில் எதுவும் நடக்கவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் ஏன் கூறுகிறார்... மொத்தத்தில் அனைவருமே காங்கிரஸை ஏன் தாக்குகிறார்கள்?" எனக் கூறினார்.

மேலும், ``கடந்த 75 ஆண்டுகளில் காங்கிரஸ், ஜனநாயகத்தை நாட்டில் உயிர்ப்புடன் வைத்திருந்ததன் காரணமாகவே மோடி இன்று பிரதமராகவும், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று முதல்வராகவும் இருக்கின்றனர்" என்றும் அசோக் கெலாட் தெரிவித்தார்.