Published:Updated:

``இந்து ராஷ்டிரமாக மாற்ற நினைத்தால் பாகிஸ்தான் நிலைதான் இந்தியாவுக்கும்!" - அசோக் கெலாட்

அசோக் கெலாட்

``அவர்கள் மத பிரச்னைகளால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெறுவார்கள். மற்றபடி, பா.ஜ.க-விடம் எந்த சித்தாந்தமோ, கொள்கையோ, ஆட்சி மாடலோ கிடையாது." - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

``இந்து ராஷ்டிரமாக மாற்ற நினைத்தால் பாகிஸ்தான் நிலைதான் இந்தியாவுக்கும்!" - அசோக் கெலாட்

``அவர்கள் மத பிரச்னைகளால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெறுவார்கள். மற்றபடி, பா.ஜ.க-விடம் எந்த சித்தாந்தமோ, கொள்கையோ, ஆட்சி மாடலோ கிடையாது." - ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

Published:Updated:
அசோக் கெலாட்

குஜராத்தில் வரும் டிசம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனை முன்னிட்டு பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் தேர்தலுக்கான வேலைகளை இப்போதே ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில், தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த பார்வையாளராக உள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், தேர்தல் வேலைகள் குறித்து கட்சித் தலைவர்களுடன் விவாதிக்க இரண்டு நாள்கள் பயணமாக நேற்று குஜராத் வந்தடைந்தார். அதைத் தொடர்ந்து பயணத்தின் இறுதிநாளான இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அசோக் கெலாட், ஆளும் பா.ஜ.க அரசைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்

செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், ``பா.ஜ.க-வினரால், நாடு முழுவதும் செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் என பலபேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் பா.ஜ.க-வினர் பாசிஸ்டுகள். அவர்கள் மத பிரச்னைகளால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெறுவார்கள். மற்றபடி, பா.ஜ.க-விடம் எந்த சித்தாந்தமோ, கொள்கையோ, ஆட்சி மாடலோ கிடையாது.

பாஜக
பாஜக

மதத்தின் அடிப்படையிலான அரசியல் என்பது எல்லாவற்றிலும் எளிதான ஒன்று. அடால்ஃப் ஹிட்லர்கூட அதில் ஈடுபட்டார். மேலும், குஜராத் மாடல் என்ற பெயரில் பா.ஜ.க மக்களை தவறாக வழிநடத்துகிறது. அதுமட்டுமல்லாமல், இந்தியாவை இந்து ராஷ்டிரமாக பா.ஜ.க மாற்ற முயற்சித்தால், பாகிஸ்தானுக்கு நிலைதான் இந்தியாவுக்கும். எனவே, இந்தியா மற்றும் காங்கிரஸின் டி.என்.ஏ ஒன்றுதான் என்பதால், அதைக் காப்பாற்ற நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் தேவை" எனக் கூறினார்.