Published:Updated:

ரஜினியைவிடச் சாதித்தவர் கமல்! - விருது அறிவிப்பால் கொந்தளிக்கும் சீமான்

சீமான்
சீமான்

பி.ஜே.பி-யுடனான நெருக்கத்தால்தான் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்துள்ளது என்கிறார் சீமான்.

கடந்த 2018-ம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று திருச்சி நீதிமன்றத்தில் ஆஜரானார். பிறகு, பத்திரிகையாளர்களைச் சந்தித்த சீமான், ``வெறுங்கையை வீசிக்கொண்டு வந்தவர்கள், இங்குள்ள அனைத்தையும் தன்வயப்படுத்துவதையே வேலையாகக் கொண்டுள்ளனர்.

சீமான்
சீமான்

நமது பாட்டன் ஆதிசிவனை, ருத்ரனாக மாற்றினார்கள். தமிழ் மூதாதையர் முருகனை சுப்ரமணியன் என மாற்றினார்கள். பாலை நிலத்தின் கடவுளான கொற்றவையைக் `காளி'யாக மாற்றினார்கள். மேலும், முல்லை நிலத்தின் தெய்வமான மாயோனை கிருஷ்ணனாக மாற்றியவர்கள்தாம், இப்போது திருவள்ளுவரை கையில் எடுத்துள்ளார்கள். உலகப் பொதுமறை தந்த வள்ளுவருக்கு காவியடித்து தன் வயப்படுத்த முயல்கிறார்கள். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலையை அவமதிப்பு செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும். தமிழக அரசு, உடனடியாக சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டும். தமிழக சமூகம் பண்பட்ட சமூகம் என்பதால் வீதியில் இறங்கிப் போராட தயங்குகிறார்கள். ஆனால், தன்மானத்துக்கு இழுக்கு வரும்போது தமிழர்கள் வெகுண்டெழுந்தால் மிகப் பெரிய பிரச்னையாகும்.

`எச்சரிக்கிறோம் ராஜபக்‌ஷேவை’ முதல் இன்றுவரை சீமான் ஈழப்பேச்சுகளின் தாக்கம் என்ன?

பா.ஜ.க-வைச் சேர்ந்த ஹெச்.ராஜா, திருவள்ளுவரை இந்து புலவர் என்கிறார். ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்னாள் இந்து என்கிற நாடு இல்லை. ஏன் `இந்து' என்கிற சொல்லே கிடையாது. உங்கள் இந்து தர்மம், மனிதர்களை நான்கு வர்ணங்களாகப் பிரிக்கிறது. ஆனால், எங்கள் வள்ளுவர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறார். மேலும் நீங்கள், படிப்பவரின் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்கிறீர்கள். ஆனால், வள்ளுவனோ, "தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு" என்கிறார்.

திருவள்ளுவர் சிலை
திருவள்ளுவர் சிலை

அப்படிப்பட்ட உலகப் பொதுமறை தந்த வள்ளுவனுக்கு காவிச் சாயம் பூச நினைப்பது, தேவையற்ற செயல் என்பதும், இதனால் தமிழகத்தின் அமைதி கெடுக்கக் கூடாது என்பதும்தான் என்னுடைய வேண்டுகோள். நாட்டில் உள்ள நிலம் மற்றும் வளம் சார்ந்த பிரச்னைகளைக் கையில் எடுத்து அரசியல் செய்யுங்கள்.

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அ.தி.மு.க கூட்டணியில் இருப்பதால் கூட்டணி தர்மத்துக்காக எடப்பாடி பழனிசாமி ஆளுமை மிக்க தலைவர் என்று கூறியிருக்கிறார். திரையுலகில் சாதித்ததற்காக நடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியிருப்பதை வரவேற்கிறேன். ஆனால், அவரைவிடச் சாதித்தவர்கள் இருக்கிறார்கள். நடிகர் கமல்ஹாசன் 60 ஆண்டுக்காலம் கலை உலகில் சாதித்துள்ளார்.

`நகைகளைப் புதைக்கும் ஸ்டைல்; ட்ரம் நிறைய பணம்!' -திருவாரூர் முருகன் மனைவி சொல்லும் சீக்ரெட்

அதேபோல் இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா போன்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ரஜினிகாந்த் மத்திய பி.ஜே.பி அரசு நண்பர் என்பதால் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கியுள்ளது" என்றார்.

பின் செல்ல