Published:Updated:

`காலம் தாழ்த்தி வழங்கினாலும் பொருத்தமான விருது!' - ரஜினியை வாழ்த்திய ராஜேந்திர பாலாஜி

`ரஜினிக்கு மத்திய அரசு முன்கூட்டியே விருது வழங்கியிருக்க வேண்டும்' என திருவில்லிப்புத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் கூறினார்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி ( ஆர்.எம்.முத்துராஜ் )

கோவாவில் நடைபெற உள்ள தேசிய திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரவேற்றிருக்கிறார்.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

இதுகுறித்து பேசிய அவர், ``மத்திய அரசு ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவது பொருத்தமானது. அவரது நடிப்புக்கு, அவரது பணிக்கு, யதார்த்தமான பேச்சுக்கு, தமிழக மக்களை நேசிப்பதற்காக, உயரிய விருதை மத்திய அரசு வழங்குகிறது.

இந்த விருதைப் பெற இருக்கும் ரஜினிக்கு எனது வாழ்த்துகள். இந்த விருதை மத்திய அரசு முன்கூட்டியே கொடுத்திருக்கலாம். காலம் தாழ்த்தி வழங்கினாலும் பொருத்தமான நபருக்கு வழங்கியுள்ளது. இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க வரலாறு காணாத தோல்வியை சந்திக்கப் போகிறது. ஸ்டாலினுக்கு முதல்வர் ஆகும் யோகம் கிடையாது. 2021சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு அடி விழப்போகிறது என்பதற்கு தொடக்கம்தான் இடைத்தேர்தலில் அ.தி.மு.க-வின் வெற்றி.

`ரஜினி பா.ஜ.க-வில் சேர்ந்தால் முதல்வர் வேட்பாளரா?’ -பொன்.ராதாகிருஷ்ணன் பதில்

நடிகர்கள் யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம்; தவறில்லை. நடிப்பவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும் திரைப்படத்தில் நடிப்பதுபோல் நிஜ வாழ்க்கையில் நடிக்கக் கூடாது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், வாய்ப்பு கிடைக்கும் என்ற நோக்கத்தில் நடிகர்கள் அரசியல் பேசுகிறார்கள். அதை சந்திக்கத்தான் அ.தி.மு.க உள்ளது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

அ.ம.மு.க ஒரு கட்சியல்ல. அது ஒரு குரூப். அங்கிருந்து அ.தி.மு.கவை நோக்கி அனைவரும் வந்துகொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் மட்டுமே தேர்தலில் போட்டி. சசிகலாவை தினகரன் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார் நடக்கப்போவதைப் பின்பு பாருங்கள்'' என்றார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ரஜினி ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.