Election bannerElection banner
Published:Updated:

`ரசிகப் பெருமக்களே... மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்!’ - ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

தன் ரசிகர்களுக்கு ரஜினி, தன்னை வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என அண்மையில் அறிவித்திருந்த நிலையில், ரசிகர்கள் தொடர்ந்து அவரை அரசியலுக்கு வர வலியுறுத்திப் போராட்டம் நடத்திவந்தனர். இந்தநிலையில், ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருக்கிறார்.

`ரசிகப் பெருமக்களே... மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்!’ - ரஜினிகாந்த்

அந்த அறிக்கையில் ரஜினிகாந்த், ``என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு...

நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலர் ரஜினி மக்கள் மன்றப் பதவி பொறுப்பில் இருந்தும், மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்.

கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும், தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது.

தலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

நான் ஏன் இப்போது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கெனவே விரிவாக விளக்கியிருக்கிறேன்.

என் முடிவைக் கூறிவிட்டேன்.

தயவுகூர்ந்து இதற்குப் பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி, என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

வாழ்க தமிழ்! மக்கள் வளர்க தமிழ்நாடு! ஜெய்ஹிந்த்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ரஜினி : இப்போ கட்சி இல்லை... அப்போ வாய்ஸ் உண்டா?
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு