Published:Updated:

`வள்ளுவரும் மாட்ட மாட்டார்.. நானும் மாட்ட மாட்டேன்!’ - போயஸ் கார்டனில் தகித்த ரஜினி

ரஜினி
ரஜினி

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவன அலுவலகத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் ரஜினி உட்பட பல திரையுல பிரபலங்கள் கலந்துகொண்டனர்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனின் 65-வது பிறந்தாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ராஜ்கமல் நிறுவனத்தினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். கமலின் பிறந்தநாளான நேற்று, அவரது சொந்த ஊரான பரமக்குடியில் கமலின் தந்தை, சீனிவாசனின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் கமல்ஹாசனின் குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

`வள்ளுவரும் மாட்ட மாட்டார்.. நானும் மாட்ட மாட்டேன்!’ - போயஸ் கார்டனில் தகித்த ரஜினி

இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக, இன்று சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழா ஆகியவை நடைபெற்றன. இயக்குநர் பாலசந்தரால் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இரு பெரும் நடிகர்களான கமல், ரஜினி ஆகிய இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிலையைத் திறந்து வைத்தனர்.

மேலும், கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் மணிரத்னம், கே.எஸ். ரவிக்குமார், நடிகர் நாசர் மற்றும் பல திரை பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். முன்னதாக இதில் பேசிய கவிஞர் வைரமுத்து, “20 ஆண்டுகளுக்கு முன்பு கமலிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. பாலசந்தரைப் பற்றி ஒருவரி சொல்லுங்கள் என்று அதற்கு ‘என் வருமான வரிக்குக் காரணமானவர்’ என கமல் பதில் அளித்தார். இதைவிட நாகரிகமாக, செல்லமாக, கிண்டலாக ஒருவரைப் பாராட்ட முடியாது. கமலுக்கும் பாலசந்தருக்கும் மத்தியில் ஊடலும் இருக்கும் கூடலும் இருக்கும். ஆனால் அவர்கள் உரசினால் இரு கற்கண்டுகள் உரசுவது போல் மட்டுமே இருக்கும். அந்த உரசலில் சர்க்கரை மட்டுமே உதிரும்.

`வள்ளுவரும் மாட்ட மாட்டார்.. நானும் மாட்ட மாட்டேன்!’ - போயஸ் கார்டனில் தகித்த ரஜினி

தமிழ் சினிமாவுக்கு இரண்டு கலை பொக்கிஷங்களைக் கொடுத்தவர் பாலசந்திரன். கமல், ரஜினி ஆகிய இருவரையும் இந்த மண்ணில் விதைத்துவிட்டுச் சென்றுள்ளார் அவர். பாலசந்தருக்கு யார் வேண்டுமானாலும் சிலை அமைக்கலாம். ஆனால் அதை கமல் வைத்ததில் ஒரு குறிப்பு உள்ளது. ‘தன் வாழ்க்கையை உயர்த்தியவரை எப்போதும் மறக்கக்கூடாது என்பதன் அடையாளம்தான் இந்தச் சிலை” என்று பேசி முடித்தார்.

``போக்கிடமின்றி அரசியலுக்கு வரவில்லை!" - பரமக்குடி விழாவில் கமல்ஹாசன்

இதில் கலந்துகொண்ட நடிகர் ரஜினி பேசும்போது, “என் கலையுலக அண்ணன் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து மற்றும் இங்கு வந்திருப்பவர்களுக்கு வணக்கம். கமல் வாழ்வில் மறக்க முடியாத இரண்டு நாள்கள் நேற்றும் இன்றும். நேற்று பரமக்குடியில் தந்தையின் சிலை திறந்துவைத்தார். இன்று அவரின் முதல் குழந்தையான ராஜ்கமல் நிறுவன அலுவலகம் மற்றும் கே.பி சார் சிலை ஆகியவற்றைத் திறந்து வைத்துள்ளார். கமல் முழுவதுமாக அரசியலுக்கு வந்தாலும் அவரின் தாய்வீடான கலையை மறக்கமாட்டார். ராஜ்கமல் நிறுவனம் மூலம் இன்னும் பல பிரமாண்ட படங்களை எடுப்பார். கலைதான் அவரின் உயிர்.

`வள்ளுவரும் மாட்ட மாட்டார்.. நானும் மாட்ட மாட்டேன்!’ - போயஸ் கார்டனில் தகித்த ரஜினி

கமல் நடித்த அபூர்வ சகோதர்கள் படம் வெளியான பிறகு நான் பார்க்கவில்லை. நிறைய ஷூட்டிங் வேலைகள் இருந்ததால் என்னால் பார்க்க முடியவில்லை. பின்னர் ஒரு நாள் இரவு 11 மணிக்குப் படம் தொடங்கி இரவு 2 மணிக்கு முடிந்தது. அந்த இரவிலேயே கமலைப் பார்க்கவேண்டும் எனத் தகவல் தெரிவித்தேன். அவர் உறங்கிக்கொண்டிருப்பார் வேண்டாம் என்றார்கள், எதையும் கேட்காமல் நேராக அவரது வீட்டுக்குச் சென்று கதவைத் தட்டி அவருக்குக் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தேன். அப்போதே அவரிடம் சொன்னேன் `நீங்கள் என்னைவிட வயதில் சிறியவராக உள்ளீர்கள் இல்லையென்றால் காலில் விழுந்திருப்பேன்’ என்று.

அந்த காலத்தில் எந்த சினிமா, கிராஃபிக்ஸ் வசதியும் இல்லாதபோது அற்புதமான பிரமாண்ட படங்களை எடுத்தவர் கமல். தேவர் மகன் போல யாராலும் படம் எடுக்க முடியாது. எனக்கு நேரம் போகவில்லை என்றால் நான் பார்க்கும் மூன்று படங்கள் காட்ஃபாதர், திருவிளையாடல், ஹேராம். ஒரு 30-40 முறை ஹேராம் படத்தைப் பார்த்திருப்பேன். இன்று பாலசந்தரின் சிலையைப் பார்க்கும்போது பழைய நினைவுகள் ஞாபகத்துக்கு வருகிறது. கமல் நிறுவனம் இன்னும் நிறைய படங்களைத் தயாரித்து தமிழ் மக்களுக்கும் இந்தியாவுக்கும் வழங்க வேண்டும்” எனக் கூறி முடித்தார்.

`வள்ளுவரும் மாட்ட மாட்டார்.. நானும் மாட்ட மாட்டேன்!’ - போயஸ் கார்டனில் தகித்த ரஜினி

இந்த நிகழ்ச்சியை முடித்து விட்டு வீடு திரும்பும்போது தன் போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினி, “திருவள்ளுவர் ஒரு ஞானி. அவருக்குச் சாதி, மதம் போன்ற எதுவும் இல்லை. ஆனால் அவர் கடவுள் நம்பிக்கையுடன் இருந்தார் என்பதை மட்டும் யாராலும் மறுக்க முடியாது. பா.ஜ.க ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்தது அவர்களின் தனிப்பட்ட விஷயம். நாட்டில் உள்ள அனைவரும் திருவள்ளுவருக்குக் காவி நிறம் பூசவேண்டும் என அவர்கள் சொல்லவில்லை. நாட்டு மக்கள் பல பிரச்னைகளை சந்தித்து வரும் நிலையில் இதைப் பெரிதாக்குவது சிறுபிள்ளைத் தனமாக உள்ளது.

எனக்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது அதற்கு நன்றிகள். உள்ளாட்சித் தேர்தலில் போட்டியில்லை. பொன். ராதாகிருஷ்ணன் என்னைச் சந்தித்தது மிகவும் சாதாரணமானது, என்னை பா.ஜ.கவில் இணையவேண்டும் என அவர் கூறவில்லை. திருவள்ளுவருக்குக் காவி பூசியதைப் போல் எனக்குப் பூச நினைக்கிறார்கள். வள்ளுவரும் மாட்டமாட்டார்.. நானும் மாட்டமாட்டேன்” என அவருக்கே உரித்தான ஸ்பெஷல் சிரிப்புடன் முடித்தார்..!

அடுத்த கட்டுரைக்கு