Published:Updated:

அரசியல் கட்சி இப்போதைக்கு இல்லை; ஊழலை ஒழிக்க சட்ட ஃபார்முலா! - ரஜினி கையில் எடுக்கும் புது அஸ்திரம்

ரஜினி

கடந்த இரண்டு நாள்களாக ரஜினியின் எண்ண ஒட்டத்தில் ஒடிக்கொண்டிருப்பது லஞ்சம், ஊழலை ஒழிப்பது பற்றித்தான். லஞ்சத்துக்கு எதிராக இயக்கங்கள், முழுமையான சட்டதிட்டம் தேவை என்று ரஜினி உறுதியாக நம்புகிறார்.

அரசியல் கட்சி இப்போதைக்கு இல்லை; ஊழலை ஒழிக்க சட்ட ஃபார்முலா! - ரஜினி கையில் எடுக்கும் புது அஸ்திரம்

கடந்த இரண்டு நாள்களாக ரஜினியின் எண்ண ஒட்டத்தில் ஒடிக்கொண்டிருப்பது லஞ்சம், ஊழலை ஒழிப்பது பற்றித்தான். லஞ்சத்துக்கு எதிராக இயக்கங்கள், முழுமையான சட்டதிட்டம் தேவை என்று ரஜினி உறுதியாக நம்புகிறார்.

Published:Updated:
ரஜினி

சில நாள்களுக்கு முன்னர், ரஜினி பெயரில் கடிதம் ஒன்று வெளியானது. அதில், அவரது உடல்நிலை பற்றி முக்கியத் தகவல்கள் இருந்தன. அடுத்த சில நாள்களில், `அந்தக் கடிதம் பொய். உடல்நிலை பற்றி இருந்த தகவல்கள் உண்மை' என்று ரஜினி டிவீட் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து, `வா... தலைவா! உங்கள் முடிவுக்கு கட்டுப்படுவோம்... தமிழகத்தைக் காப்பாற்றுங்கள்... அரசியல் மாற்றம் உங்களால் மட்டுமே சாத்தியம்’... இப்படிப் பல்வேறு வாசகங்கள் இடம்பெற்ற போஸ்டர்கள் சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் ஒட்டப்பட்டிருந்தன. இந்தநிலையில், நவம்பர் 1-ம் தேதியன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் பிரபல ஆடிட்டரும் துக்ளக் பத்திரிகை ஆசிரியருமான குருமூர்த்தி திடீரென சந்தித்துப் பேசினார். பி.ஜே.பி-யின் ஆதரவு பற்றிப் பேச வந்ததாக ரஜினி மன்றத்தினர் பேசிக்கொள்கிறார்கள்.

 ஆடிட்டர் குருமூர்த்தி
ஆடிட்டர் குருமூர்த்தி

இது ஒருபுறமிருக்க, அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை லஞ்ச ஒழிப்பு வாரம் தமிழகத்தில் அமலில் இருக்கிறது. இந்தநேரத்தில், தமிழகத்தில் ஆங்காங்கே லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டில் ஈடுபட்டுவருகின்றனர். வேலூரில் டாஸ்மாக் கடை, சேலத்தில் பத்திரப்பதிவு டி.ஜ.ஜி ஒருவர் வீட்டில் பணப் பறிமுதல்... இப்படி அடுத்தடுத்த செய்திகள் மீடியாக்களில் வெளியானதைப் பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார் ரஜினி. `ஊழலை ஒழிக்கவே முடியாதா?’ என்று நெருக்கமானவர்களிடம் ஆவேசமாகப் பேசியிருக்கிறார். இந்தச் செய்திக்கு முன்பு வரை அரசியல் பக்கமிருந்த அவரின் கவனம், தற்போது லஞ்ச ஊழல் ஒழிப்பு விஷயத்தின் மீது திரும்பியிருக்கிறது.

எப்படியும் கொரோனா பரவல் சமயத்தில் ரஜினி ஆக்டிவ் அரசியலுக்கு வர மாட்டார். புதுக்கட்சியும் ஆரம்பிக்க முடியாது. இந்தநிலையில், அவரின் வழக்கமான டயலாக்கான, `சிஸ்டம் சரியில்லை’ என்பதை நினைவுபடுத்தி, அதைச் சரிசெய்ய முயற்சி எடுக்கும்படி அட்வைஸ் பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள் ரஜினியின் நண்பர்கள். தமிழகத்திலோ, இந்தியாவிலோ சிஸ்டம் சரியாகத்தான் இருக்கிறது. ஏட்டளவில் சட்டங்கள் இருக்கின்றன. அதை அமல்படுத்தும் முறைதான் சரியில்லை. இங்குதான், லஞ்ச ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதை ஒழிக்க ரஜினி ஏதாவது முயற்சி எடுத்தால் மக்கள் வரவேற்பார்கள். கடந்த இரண்டு நாள்களாக ரஜினியின் எண்ண ஒட்டத்தில் ஒடிக்கொண்டிருப்பது லஞ்சம், ஊழலை ஒழிப்பது பற்றித்தான். லஞ்சத்துக்கு எதிராக இயக்கங்கள், முழுமையான சட்டதிட்டம் தேவை என்று ரஜினி உறுதியாக நம்புகிறார்.

சுப்புராஜ்
சுப்புராஜ்

கிட்டத்தட்ட இதே கோணத்தில் ஆனந்த விகடன் (3.6.20) இதழில் மதுரை மாவட்டம், மேலூர் அருகே தெற்குப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புராஜா என்பவரின் பேட்டி வெளியாகியிருந்தது. ரஜினி மன்ற ஒன்றியச் செயலாளரான அவர் லஞ்சம், ஊழலை ஒழிக்கும் வகையில் ரஜினிக்கு புதுத் திட்டத்தை சொல்லியிருந்தார். தியானத்தில் தன்னுடன் பாபாஜி பேசுவதாக நம்புகிறவர். பாபாவும் முருகக் கடவுளும் சொல்லித்தான் இந்த விஷயத்தை வெளிப்படையாகப் பேசுவதாக நம்மிடம் கூறினார். இவரின் பேட்டி வெளியான ஆ.வி இதழை ரஜினியின் பார்வைக்கு மீண்டும் கொண்டு சென்றிருக்கிறார்கள் ரஜினிக்கு நெருக்கமானவர்கள்.

தற்போது நம்மிடம் பேசிய சுப்புராஜ், ``ஊழல் ஒழிப்புச் சட்டத்தை மட்டும் இந்தியாவில் அமல்படுத்த உதவி செய்துவிட்டு அரசியலுக்கு வரவில்லை என்றாலும், ரசிகர்களாகிய நாங்களும், தமிழக மக்களும் வருத்தப்பட மாட்டோம். இதை வலியுறுத்தி ஒரு சினிமா படம் எடுக்க அனைத்து ஸ்கிரிப்ட்டும் ரெடி செய்திருந்தேன். ஆனால், கொரோனா நேரத்தில் எங்கள் தலைவர் ரஜினி படத்தில் நடிக்க மாட்டார். அதேவேளையில், ஊழலை ஒழிக்க என்னிடம் சட்ட பார்ஃமுலா இருக்கிறது. அதை நான் ரஜினியிடம் தருவதற்கான நேரம் வந்துவிட்டது. அவர் அதைச் சட்ட நிபுணர்கள், முன்னாள் நீதிபதிகளிடம் காட்டி ஆய்வு செய்யட்டும். பிறகு, ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யட்டும். இந்தியாவில் ஊழலை ஒழிக்க ரஜினியால் சட்டப் புரட்சியே நடக்கும். அ.தி.மு.க., தி.மு.க கட்சிகள் வரும் தேர்தலில் தலா 3,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யக் காத்திருக்கின்றன. மக்களுக்கு லஞ்சமாகப் பணம் கொடுக்கவிருக்கிறார்கள். இதையெல்லாம் ஒழிக்க வேண்டும்'' என்கிறார்.

தி.மு.க - அ.தி.மு.க
தி.மு.க - அ.தி.மு.க

இவரின் கருத்துக்கு ரஜினிக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால், ரஜினி இந்த ரூட்டில் பயணிக்கக் கூடாது என்று, ரஜினி மன்றத்தின் முக்கியத் தலைவர் ஒருவர் முட்டுக்கட்டை போடும் வேலையில் மும்முரமாயிருக்கிறார் என்கிற செய்தியும் வெளியாகியிருக்கிறது.