Published:Updated:

குடியரசு தின விழா: தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது ஏன்?! - முதல்வர் ஸ்டாலினுக்கு ராஜ்நாத் சிங் பதில்

ராஜ்நாத் சிங் - ஸ்டாலின்

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டின் ஊர்தி இடம்பெறாதது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

குடியரசு தின விழா: தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது ஏன்?! - முதல்வர் ஸ்டாலினுக்கு ராஜ்நாத் சிங் பதில்

குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாட்டின் ஊர்தி இடம்பெறாதது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

Published:Updated:
ராஜ்நாத் சிங் - ஸ்டாலின்

டெல்லியில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம், மேற்கு வங்கத்தின் அலங்கார ஊர்திகள் இடம்பெற வாய்ப்பில்லை என மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து, தமிழகம்,கேரளா அரசின் சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

தமிழக அரசின் அலங்கார ஊர்தி 4-வது சுற்று வரை சென்ற நிலையில், வ.உ.சி., வேலுநாச்சியார் ஆகியோர் சர்வதேச அளவில் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்கள் இல்லை எனக் கூறி நிராகரித்ததாகவும், மிகவும் பிரபலமான சுதந்திரப் போராட்ட வீரர்களை எதிர்பார்ப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோர் பிரபலமானவர்கள் இல்லையா என தமிழக மக்கள் கேள்வி எழுப்பினர். அதோடு, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனத்தையும் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் `தமிழ்நாட்டிலிருந்தும் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி நிராகரிக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது ’என முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழ்நாட்டின் பங்களிப்பு இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமருக்குக் கோரிக்கை விடுத்தார்.

ஸ்டாலின், மோடி
ஸ்டாலின், மோடி

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழகம், மேற்கு வங்க அரசின் ஊர்திகள் இடம்பெறாது என்றும், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று மறுபரீசிலனை செய்ய வாய்ப்பில்லை எனவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்க ஊர்திகள் இடம்பெறாதது குறித்த காரணங்களைத் தெரிவித்துவிட்டோம் என்றும், கடந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பைப் பார்வையிட 25,000 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்த ஆண்டு 5,000 முதல் 8,000-ஆக அது குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குடியரசு தின விழா: தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது ஏன்?! - முதல்வர் ஸ்டாலினுக்கு ராஜ்நாத் சிங் பதில்

மேலும் குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகம் இடம்பெறாதது குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்துக்கு, ராஜ்நாத் சிங் பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடித்தில்,`` குடியரசு நாள் அணிவகுப்பில் பங்கேற்க தமிழகம் உள்ளிட்ட 29 மாநிலங்களிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் முன்வடிவு முதல் மூன்று சுற்றுகள் வரை பரிசீலனையில் இருந்தது. மூன்ரு சுற்றுகள் முடிவில் இறுதிசெய்யப்பட்ட 12 அலங்கார ஊர்திகளில் தமிழ்நாடு ஊர்தி இடம்பெறவில்லை. இதற்கு முன்னதாக தமிழக அரசு சார்பில் கடந்த 2017, 2019, 2020, 2021-ம் ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பில் அலங்கார ஊர்திகள் பங்குபெற்றன. வல்லுநர் குழு மூலமே குடியரசு நாள் அணிவகுப்புக்கான அலங்கார ஊர்தி தேர்வு நடைபெறுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism