Published:Updated:

``பாஜக ஒரு சர்வாதிகாரக் கட்சி... வெற்றி தோல்வியால் காங்கிரஸ் பாதிப்படையாது" - மல்லிகார்ஜுன கார்கே

மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே

``ஒருகாலத்தில் இரண்டு எம்.பி-க்களை மட்டுமேகொண்ட கட்சியாக இருந்த பா.ஜ.க., தற்போது சர்வாதிகாரக் கட்சியாக இருக்கிறது. வெற்றி தோல்வியால் காங்கிரஸ் பாதிப்படையாது" என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் ஐந்து மாநிலத் தேர்தல் தோல்வி காரணமாக, அந்தக் கட்சியில் பல அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அவற்றில், காங்கிரஸ் தோல்வியடைந்த ஐந்து மாநிலங்களிலும், மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. கட்சிக்குள்ளாகவே சோனியா காந்திக்கு எதிராகப் பல கருத்துகள் எழுந்தாலும், பல முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கட்சித் தலைமைக்கும், சோனியா காந்திக்கும் ஆதரவு தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்திருக்கிறார்.

நரேந்திர மோடி - அமித் ஷா
நரேந்திர மோடி - அமித் ஷா

அதில் அவர், ``ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் வலுவிழந்து வலுவடைகின்றன. வெற்றி தோல்வியால் காங்கிரஸுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மேலும் கட்சியின் அடிப்படை சித்தாந்தத்தையும் காங்கிரஸ் கைவிடாது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் கருத்தியல் அல்லாதவர்களை இணைத்து அரசை நிறுவினார். இதன் காரணமாகத்தான் தற்போது காங்கிரஸும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க விரும்புகிறது" என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் வரலாற்றில் முதமுறையாக மோடி-ஷா தலைமையின் எழுச்சியால் இத்தகைய சவாலை காங்கிரஸ் எதிர்கொள்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்த மல்லிகார்ஜுன கார்கே, ``ஒரு காலத்தில் இரண்டு எம்.பி-க்களை மட்டுமே கொண்ட கட்சியாக இருந்த பா.ஜ.க., தற்போது சர்வாதிகார கட்சியாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், பா.ஜ.க அரசு செய்துகொண்டிருப்பது எதுவும் நாட்டின் நலனுக்காக இல்லை" எனக் கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism