Published:Updated:

பரந்தூர்: விமான நிலைய எதிர்ப்பு பேரணி தற்காலிகமாக நிறுத்தம்! - அமைச்சர்கள் குழு நாளை ஆலோசனை

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு ( ட்விட்டர் )

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான மக்கள் பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

பரந்தூர்: விமான நிலைய எதிர்ப்பு பேரணி தற்காலிகமாக நிறுத்தம்! - அமைச்சர்கள் குழு நாளை ஆலோசனை

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிரான மக்கள் பேரணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

Published:Updated:
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு ( ட்விட்டர் )

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையமாக பசுமை விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகளால் காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் 4,563 ஏக்கர் நிலப்பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டது. சிங்கிலி பாடி, மாடபுரம், பரந்தூர், கொளத்தூர், நெல்வாய், மகாதேவி மங்கலம், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் இந்த விமான நிலையம் அமைக்க நிலங்கள் தேர்வுசெய்யப்பட்டிருக்கின்றன. அவற்றில் 3,646 ஏக்கர் தனியார் நிலமும், 1,542 ஏக்கர் அரசு நிலமும் அடங்கும். இதில், 2,000 ஏக்கர் அளவுக்கு விவசாய நிலங்களும், 2,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் கையகப்படுத்தப்படவிருக்கின்றன.

பரந்தூர் வட்டார கிராம மக்கள் - ஏகனாபுரம் கிராம மக்கள்
பரந்தூர் வட்டார கிராம மக்கள் - ஏகனாபுரம் கிராம மக்கள்

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில், சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், மாநிலங்களவையில், தி.மு.க எம்.பி கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் மற்றும் புதிய விமான நிலையம் பற்றிக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சிவில் விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், "சென்னையில் தற்போதிருக்கும் விமான நிலையத்துக்கு இட நெருக்கடி இருக்கிறது. இதை விரிவாக்கம் செய்ய விமான நிலைய ஆணையம் ஆய்வு மேற்கொண்டது. இதன்படி, புதிய விமான நிலையம் ரூ.2,467 கோடியில் அமையவிருக்கிறது" எனத் தகவல் தெரிவித்திருந்தார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக தொழில்நுட்பப் பொருளாதார அறிக்கை தயாரிக்க தொழில் வளர்ச்சி நிறுவனம் டெண்டர் கோரியது. அதையடுத்து பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 19-ம் தேதி பேரணி நடத்தத் திட்டமிட்டிருந்தனர். அதன்படி, இன்றைய தினம் 13 கிராம மக்களும் கறுப்புக்கொடி ஏந்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிப் பேரணி நடத்தினார்கள். அப்போது, கோட்டாட்சியர், காஞ்சிபுரம் எஸ்.பி., தாசில்தார் ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விமான நிலையம்
விமான நிலையம்
கோப்புப் படம்

அமைச்சருடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. அமைச்சர் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு ஆகியோர் அடங்கிய குழு நாளை இது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.