Published:Updated:

ராமர் பாலம் வழக்கு; மத்திய அரசுக்குக் கூடுதல் அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம்!

உச்ச நீதிமன்றம்

ராமர் பாலத்தைத் தேசிய பாரம்பர்ய சின்னமாக அறிவிப்பது தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கில், பிப்ரவரி முதல் வாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

ராமர் பாலம் வழக்கு; மத்திய அரசுக்குக் கூடுதல் அவகாசம் வழங்கிய உச்ச நீதிமன்றம்!

ராமர் பாலத்தைத் தேசிய பாரம்பர்ய சின்னமாக அறிவிப்பது தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கில், பிப்ரவரி முதல் வாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

Published:Updated:
உச்ச நீதிமன்றம்

தி.மு.க-வின் கனவுத் திட்டங்களில் ஒன்றான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்துக்கு, 1998-ல் வாஜ்பாய் அரசு சார்பிலும், 2004-ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இருப்பினும் நீதிமன்ற வழக்குகளால் இன்னும் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. இப்படியானச் சூழலில், இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல்வர் ஸ்டாலின், `சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும்' எனத் தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
கோப்புப் படம்

அவையில் இதற்கு ஆதரவு தெரிவித்த பா.ஜ.க சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், ``நாங்கள் தெய்வமாக நம்பும் ராமர் பாலம் சேதமாகாமல் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுமானால் அதற்கு பா.ஜ.க-வின் முழு ஆதரவு உண்டு" எனக் கூறினார்.

தமிழ்நாட்டில் சூழல் இவ்வாறாக இருக்க, ராமர் பாலத்தைத் தேசிய பாரம்பர்யச் சின்னமாக அறிவிப்பது தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கில் மத்திய அரசு தீவிரம்காட்டிவருகிறது. முன்னாள் எம்.பி-யும், பா.ஜ.க மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, ராமர் பாலத்தை தேசிய பாரம்பர்யச் சின்னமாக அறிவிக்கவேண்டி கடந்த 2007-ல் சேது சமுத்திரம் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

சேது சமுத்திர  திட்டம் - ராமர் பாலம்
சேது சமுத்திர திட்டம் - ராமர் பாலம்

அந்த நாள் முதல் இன்றுவரை இந்த வழக்கில் இன்னும் முடிவு எட்டப்படாமல் இருக்கிறது. கடைசியாகக் கடந்த நவம்பரில், பிரமாணப் பத்திரத்தைச் சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் அளித்த பிறகும் மத்திய அரசு ஒரு நிலைப்பாட்டை எடுக்காமல் இழுத்தடிப்பது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ம ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்குவந்தது. அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, இது மத்திய அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும், பிப்ரவரி முதல் வாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசமும் கோரினார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

அதைத் தொடர்ந்து, ஏற்கெனவே கால அவகாசம் அளித்தும் மத்திய அரசு பதில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யாததால், மத்திய அமைச்சரவைச் செயலாளருக்கு சம்மன் அனுப்புமாறு, சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும் நீதிமன்ற அமர்வு அதை ஏற்க மறுத்துவிட்டது. மேலும், மத்திய அரசு பிப்ரவரி முதல் வாரத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் நீதிமன்ற அமர்வு கால அவகாசம் அளித்தது.