பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் `ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா'வின் தலைவரான மாஞ்சி, அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``ராமர் கடவுள் இல்லை. அவர் கதையில் வரும் ஒரு கதாபாத்திம். துளசிதாஸ், வால்மீகி ஆகியோரின் கருத்துகளைப் பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம்தான் ராமர்.

துளசிதாஸ், வால்மீகி ஆகியோரின் எழுத்துகளில் நல்ல கருத்துகள் நிறைந்திருக்கின்றன. நாங்கள் அவர்கள் இருவரையும் நம்புகிறோம்... ராமரை அல்ல. இந்த உலகத்தில் பணக்காரர் மற்றும் ஏழை என்ற இரண்டு சாதிகள்தான் இருக்கின்றன. ஆனால், பிராமணர்கள் பட்டியல் இனத்தவர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டிவருகின்றனர். குஜராத், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற ராம நவமி கொண்டாட்டத்தின்போது மோதல் வெடித்தது. அதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்'' என்றார்.