Published:Updated:

`நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும் எங்கே?’- பஞ்சமி நில விவகாரத்தில் ஸ்டாலினுக்கு ராமதாஸ் கேள்வி

பஞ்சமி நில விவகாரத்தில் இரண்டு கட்சித்தலைவர்களுக்கிடையே நாளுக்குநாள் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

ராமதாஸ்
ராமதாஸ்

`படம் மட்டுமல்ல பாடம்’ அசுரன் படத்தைப் பார்த்துவிட்டு ஸ்டாலின் தனது ட்விட்டரில் இப்படி பதிவிட்டிருந்தார். அதுமட்டுமன்றி, படத்தின் நாயகன் தனுஷை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அசுரன் படம் குறித்து அவர் தனது டவிட்டர் பக்கத்தில், ``பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தைக் கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் @VetriMaaran-க்கும் வாழ்ந்து காட்டியிருக்கும் @dhanushkraja-வுக்கும் பாராட்டுகள்” என்று தெரிவித்திருந்தார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஸ்டாலினின் இந்த ட்வீட்டுக்கு தனுஷ் நன்றி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில், ``பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்!” என்று பதிவிட்டிருந்தார். `முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதா?’ என்ற கேள்விகள் ஒலிக்கத்தொடங்கின. இதனிடையே ராமதாஸின் பதிவுக்கு ஸ்டாலின் பதிலளித்திருந்தார்.

ஷா கமிஷன் அறிக்கையில், மிசா கைதிகள் பட்டியலில் ஸ்டாலின் பெயர் ஏன் இல்லை? காரணம்!
இதற்குக் காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?

பஞ்சமி நிலம் தொடர்பான கருத்துக்கு ஸ்டாலின், ``மருத்துவர் ராமதாஸ் அவர்கள், தற்போது “முரசொலி “ இருக்கும் இடத்தை பஞ்சமி நிலமென்று பச்சையாகப் புளுகியிருக்கிறார்.! அது பஞ்சமி நிலமே அல்ல; வழி வழியாகத் தனியாருக்குச் சொந்தமாகப் பாத்தியப்பட்ட பட்டா- மனை. அது பஞ்சமி நிலம் என்று ராமதாஸ் நிரூபித்தால் நான் அரசியலைவிட்டு விலகத் தயார். அவர் சொல்வதை நிரூபிக்கத் தவறி, அது பச்சைப் பொய்யென்றால், அவரும் அவர் மகனும் அரசியலைவிட்டு விலகத் தயாரா?' எனக் கேள்வி எழுப்பினார்.

ஆவணம்
ஆவணம்

பஞ்சமி நில விவகாரத்தில் இரண்டு கட்சித் தலைவர்களுக்கிடையே நாளுக்குநாள் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. ஸ்டாலினின் இந்தப் பதிவுக்கு ராமதாஸ் தற்போது மீண்டும், தனது ட்விட்டர் வாயிலாக பதிலளித்துள்ளார். அதில், ``முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க 1985-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட பட்டாவை ஆதாரமாகக் காட்டியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இதற்கு காட்ட வேண்டிய ஆதாரம் நிலப் பதிவு ஆவணமும், மூல ஆவணங்களும். அவை எங்கே? நில உரிமையாளரிடமே ஆவணங்கள் இல்லையா?

முரசொலி அலுவலகம் கட்டப்பட்டது எப்போது? அதற்கான இடம் வாங்கப்பட்டது எப்போது? அவற்றை விடுத்து 1985-ஆம் ஆண்டின் பட்டாவை ஸ்டாலின் காட்டுகிறார் என்றால், இடையில் உள்ள சுமார் 20 ஆண்டுகள் மறைக்கப்படுவது ஏன்? அதன் மர்மம் என்ன?

முரசொலி அலுவலகம் உள்ள இடத்தில் அதற்கு முன் அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி இருந்தது உண்மை விளம்பி ஸ்டாலினுக்கு தெரியுமா? முரசொலி இடம் வழிவழியாக தனியாருக்குச் சொந்தமான மனை என்கிறார் ஸ்டாலின். அப்படியானால் அங்கு அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி எப்படி வந்தது?

ஸ்டாலின்
ஸ்டாலின்

நிலம் அபகரிப்பு தி.மு.க.வினருக்கு முழு நேரத் தொழில் தானே? அநாதை இல்லம் என்ற பெயரில் அண்ணா அறிவாலயம் கட்டுவதில் நடந்த மோசடிகள் தொடர்பாக 2004-ல் அ.தி.மு.க ஆட்சியில் அனுப்பப்பட்ட அறிவிக்கையை 2007-ல் தி.மு.க ஆட்சியில் தங்களுக்குத் தாங்களே ரத்து செய்து கொண்ட நியாயவான்கள் தானே தி.மு.க தலைமை!” என்று பதிவிட்டுள்ளார்.