Election bannerElection banner
Published:Updated:

ராமநாதபுரம், நாமக்கல் சட்டமன்றத் தொகுதிகள்... 54 ஆண்டுகளாகத் தொடரும் ஆட்சி சென்டிமென்ட்!

தலைமைச் செயலகம்
தலைமைச் செயலகம்

வழக்கம்போலவே இரண்டு தொகுதிகளில் இந்தமுறையும் வெற்றிபெற்ற கட்சிதான் மாநிலத்தில் ஆட்சியையும் பிடித்திருக்கிறது.

'எங்கள் தொகுதியில் வெற்றிபெறும் கட்சிதான் மாநிலத்திலும் ஆட்சியைப் பிடிக்கும்’ என்பது போன்ற கதைகள் தமிழகம் முழுவதும் பெரும்பாலான தொகுதி மக்களால் சொல்லப்படுவதுண்டு. ஆனால், உண்மையில் அதில் பெரும்பாலானவை வெறும் கதைகளாகத்தான் இருக்கும். பல தொகுதிகளில் அந்தத் தொகுதியை ஒரு கட்சியும், மாநிலத்தில் ஆட்சியை வேறு ஒரு கட்சியும் கடந்த காலங்களில் பிடித்திருக்கும். ஆனால், உண்மையில், 1967-லிருந்து கடந்த 2016 வரை, தமிழகம் முழுவதும் ஏழு தொகுதிகளில், எந்தக் கட்சி அல்லது எந்தக் கூட்டணி வெற்றி பெறுகிறதோ அந்தக் கட்சிதான் மாநிலத்திலும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஆனால், அதில் ஐந்து தொகுதிகளில் இந்த முறை மாறுபட்ட முடிவுகள் வந்திருக்கின்றன. ஆனால், வழக்கம்போலவே இரண்டு தொகுதிகளில் இந்தமுறையும் வெற்றிபெற்ற கட்சிதான் மாநிலத்திலும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது.

ராமநாதபுரம் தொகுதி
ராமநாதபுரம் தொகுதி

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், 1967 முதல் கடந்த 2016 வரை தேர்தல் வரை கணக்கில் எடுத்துக்கொள்ள, ஆரணி, மேட்டூர், சங்ககிரி, வீரபாண்டி, நாமக்கல், ராமநாதபுரம், மொடக்குறிச்சி என மொத்தமாக ஏழு தொகுதிகளில் எந்தக் கட்சி அல்லது கூட்டணிக் கட்சி வெற்றிபெற்றிருக்கிறதோ, அந்தக் கட்சிதான் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஆனால், இந்தத் தேர்தலில், அவற்றில் ஐந்து தொகுதிகளில் மாறுபட்ட முடிவுகள் வந்துள்ளன. ஆரணி, மேட்டூர், சங்ககிரி, வீரபாண்டி, மொடக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் மொடக்குறிச்சியில் பா.ஜ.க-வும் மற்ற நான்கு தொகுதிகளில் அ.தி.மு.க-வும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஆனால், ராமநாதபுரம், நாமக்கல் ஆகிய இரண்டு தொகுதிகளில் வழக்கம்போலவே, தற்போது மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ள கட்சியான தி.மு.க-வே வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த 8 தொகுதிகளில் ஜெயிச்சா கோட்டையில் கொடி பறக்குமா?#TNElection2021

நாமக்கல் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட பெ.ராமலிங்கமும், ராமநாதபுரம் தொகுதியில் காதர் பாட்ஷா (எ) முத்துராமலிங்கமும் வெற்றிபெற்றிருக்கின்றனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு