Published:Updated:

"ராகுல், என் தாத்தாவை அவமதித்துவருகிறார்; அதனால் புகாரளிக்கப்போகிறேன்!"- சாவர்க்கர் பேரன்

ராகுல் காந்தி - ரஞ்சித் சாவர்க்கர்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீது, மும்பை சிவாஜி பார்க் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக சாவர்க்கர் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் தெரிவித்திருக்கிறார்.

"ராகுல், என் தாத்தாவை அவமதித்துவருகிறார்; அதனால் புகாரளிக்கப்போகிறேன்!"- சாவர்க்கர் பேரன்

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மீது, மும்பை சிவாஜி பார்க் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக சாவர்க்கர் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
ராகுல் காந்தி - ரஞ்சித் சாவர்க்கர்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். இந்த யாத்திரை இப்போது மகாராஷ்டிராவுக்குள் நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை பழங்குடியினத் தலைவர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளையொட்டி ஹிங்கோலியில் ஜன்ஜாட்டிய கௌராஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ராகுல் காந்தி பங்கேற்றார்.

சாவர்க்கர்
சாவர்க்கர்

அப்போது பேசிய அவர், ``அந்தமான் சிறையில் சாவர்க்கர் ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு அவர் எழுதிய மன்னிப்புக் கடிதம். அந்தக் கடிதத்தில் அவர் தன்னை விடுவிக்குமாறு மன்றாடியிருந்தார். பின்னர் சாவர்க்கர் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் பென்ஷன் பெற்றார். சிறையிலிருந்து வந்த பின்னர் அவர் பிரிட்டிஷ் படைகளில் சேர்ந்தார். அவருக்கும் பிர்சா முண்டாவுக்கும் வித்தியாசம் இருக்கிறது. 24 வயதிலேயே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து போரிட்டவர்தான் நம் பிர்சா முண்டா. அவருடைய கொள்கைகளை இன்று பா.ஜ.க-வும் ஆர்.எஸ்.எஸ்-ஸும் எதிர்க்கின்றன.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

பழங்குடியின மக்களை `ஆதிவாசி' என்பதற்கு பதிலாக `வனவாசி' என்று அழைப்பதன் பின்னணியில் பா.ஜ.க-வின் திட்டம் இருக்கிறது. இந்தப் பெயர் மாற்றத்தால் பழங்குடிகளுக்கான நிறைய சலுகைகள் பறிபோயிருக்கின்றன. பா.ஜ.க அரசு தொடர்ச்சியாக அரசியல் சாசனத்துக்கு எதிராகச் செயல்படுகிறது. அரசியல் சாசனம் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் அம்பேத்கரால் எழுதப்பட்டது. அப்போதே `அரசியல் சாசனம் வேண்டாம்' என்று சொன்னது பா.ஜ.க. அப்போதிருந்தே பா.ஜ.க அரசியல் சாசனத்தைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது" எனக் கூறினார்.

ரஞ்சித் சாவர்க்கர்
ரஞ்சித் சாவர்க்கர்
ட்விட்டர்

இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, வீர் சாவர்க்கரைத் தொடர்ந்து அவமதித்துவருவதாக சாவர்க்கரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் விமர்சித்து குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``ராகுல் காந்திமீது, மும்பை சிவாஜி பார்க் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போகிறேன். 2017-ம் ஆண்டு முதல் ராகுல் காந்தி தொடர்ந்து என்னுடைய தாத்தாவை அவமதித்துவருகிறார். வீர் சாவர்க்கர் ஒரு சுதந்திரப் போராட்ட தியாகி. ஆனால் வாக்குவங்கி அரசியல் செய்யும் காங்கிரஸ், சாவர்க்கரைத் தொடர்ந்து அவமதித்துவருகிறது" எனத் தெரிவித்தார்.