Published:Updated:

`பெண்கள் அணியும் சில ஆடைகள் தான் பாலியல் வன்கொடுமைக்கு காரணம்!' - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு

எம்.எல்.ஏ ரேணுகாச்சார்யா

`கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் உடல் முழுவதும் மறைக்கும் சீருடையை அணிய வேண்டும். பெண்கள் அணியும் ஒருசில ஆடைகள் தான் பாலியல் வன்கொடுமைகளுக்கு முக்கிய காரணம்.' - ரேணுகாச்சார்யா

Published:Updated:

`பெண்கள் அணியும் சில ஆடைகள் தான் பாலியல் வன்கொடுமைக்கு காரணம்!' - பாஜக எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு

`கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் உடல் முழுவதும் மறைக்கும் சீருடையை அணிய வேண்டும். பெண்கள் அணியும் ஒருசில ஆடைகள் தான் பாலியல் வன்கொடுமைகளுக்கு முக்கிய காரணம்.' - ரேணுகாச்சார்யா

எம்.எல்.ஏ ரேணுகாச்சார்யா

பெண்கள் அணியும் ஒரு சில உடைகளால் தான் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பதாக பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ ரேணுகாச்சார்யா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் ஹிஜாப், ஜீன்ஸ், கூன்ஹாட், பிகினி என எதை அணிவது என்பது குறித்து முடிவெடுப்பது பெண்களின் உரிமை எனத் தெரிவித்தார். பிரியங்கா காந்தியின் கருத்து சரியான கருத்தில்லை. கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் உடல் முழுவதும் மறைக்கும் சீருடையை அணிய வேண்டும். பெண்கள் அணியும் ஒருசில ஆடைகள் தான் பாலியல் வன்கொடுமைகளுக்கு முக்கிய காரணம். பள்ளி மற்றும் கல்லூரிகளில் சீருடை கட்டாயம் என்று கேரளா மற்றும் மும்பை உயர் நீதிமன்றங்கள் கூறியுள்ளதாக அரசும் தெரிவித்துள்ளது.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தியின் தாயார் இத்தாலி கலாசாரம் என்பதால் பிரியங்கா காந்திக்கு நமது நாட்டின் கலாசாரம் புரியாது. அவர் இதுபோன்று கூறியிருப்பது நிறைய அர்த்தங்களுக்கு வழிவகுக்கும். சீருடை விஷயத்தில் பா.ஜ.க அரசியல் செய்யவில்லை. பெண்களுக்கு நமது நாட்டில் மரியாதை உள்ளது. அதனால், பிரியங்கா காந்தி தன்னுடைய கருத்தை திரும்பப்பெற்றுக்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.

பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் கருத்து சமூக வலைதளங்களில் சர்ச்சையானதை அடுத்து அவர், ``என்னுடைய கருத்து உங்களைக் காயப்படுத்தி இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" எனக் கூறிவிட்டார்.