Published:Updated:

ராஷ்மி தாக்கரே, சுப்ரியா சுலே, அம்ருதா பட்னாவிஸ்... மகாராஷ்டிர அரசியலை இயக்கும் த்ரீ குயின்ஸ்!

ராஷ்மி தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிர அரசியல் களத்தில் இப்போது சரத்பவார், உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ் ஆகிய மூன்று பேரும்தான் முக்கியமானவர்கள். இவர்கள் மூன்று பேரின் அரசியல் வெற்றிகளுக்கும் பின்னிருந்து உதவுபவர்கள் பெண்கள்!

ராஷ்மி தாக்கரே, சுப்ரியா சுலே, அம்ருதா பட்னாவிஸ்... மகாராஷ்டிர அரசியலை இயக்கும் த்ரீ குயின்ஸ்!

மகாராஷ்டிர அரசியல் களத்தில் இப்போது சரத்பவார், உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ் ஆகிய மூன்று பேரும்தான் முக்கியமானவர்கள். இவர்கள் மூன்று பேரின் அரசியல் வெற்றிகளுக்கும் பின்னிருந்து உதவுபவர்கள் பெண்கள்!

Published:Updated:
ராஷ்மி தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிர முதல்வர் பதவியிலிருந்து தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தது முதலே கடும் உற்சாகத்தில் காணப்பட்டார் சுப்ரியா சுலே. தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் அரசியல் வாரிசான இவர் எம்.பி-யும்கூட. மும்பை மந்திராலயாவில் நடந்த எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு விழாவுக்கு வந்த அனைவரையும் வாசலில் நின்று உற்சாகத்துடன் வரவேற்றார் சுப்ரியா. முகத்தித்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி தென்பட்டது. கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்திய, தன் சகோதரர் அஜித் பவார் மந்திராலயா வந்தபோது, சுப்ரியா அவரின் காலில் விழுந்து ஆசியும் வாங்கிக்கொண்டார். இதனால், அஜித் பவாருக்கு உச்சி குளிர்ந்துபோனது. தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் சுப்ரியாவுக்கும் அஜித் பவாருக்கும் ஏற்பட்ட அதிகார போட்டியே அவரை பட்னாவிஸ் பக்கம் ஓட வைத்ததாகவும் பேச்சு உண்டு.

சகோதரி சுப்ரியாவுடன் அஜித் பவார்
சகோதரி சுப்ரியாவுடன் அஜித் பவார்

இந்தச் சமயத்தில், சுப்ரியா வைத்த வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் அஜித் பவாரை உலுக்கி எடுத்துவிட்டது. `கட்சியை விடுங்கள், பதவியை விடுங்கள் , குடும்ப உறவு என்னவாவது..!' என்று அஜித் பவாரிடத்தில் அந்த ஸ்டேட்டஸ் கேட்டது... குடும்ப உறவுகள் காட்டிய பாசமும் தேவையான ஆதரவு கிடைக்கா சூழலும் சின்ன பவாரின் மனதுக்குள் விவாதத்தை எழுப்ப, நான்கே நாள்களில் மீண்டும் சரத்பவாரிடம் திரும்பினார். `அப்பா, அண்ணன் வந்தால் திட்டாதீர்கள் கடுமை காட்டாதீர்கள்' என்று தந்தையிடம் சுப்ரியா அஜித் பவாருக்காக வாதாடியுள்ளார். மகளின் அன்பு கட்டளையால்தான், பதவி ஆசையில் துரோகமிழைத்து ஓடிய அஜித் பவாரை மன்னித்து கட்சியிலிருந்து நீக்காமல் வைத்துள்ளராம் சரத்பவார். அஜித் பவாரைக் கட்சியைவிட்டு நீக்கினாலும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் இருக்காது என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். இழைத்த துரோகத்துக்கு அஜித் பவார் தனி ஆளாக நிற்பார். இந்த விஷயத்தில், மறப்போம்... மன்னிப்போம்... பாணியை சரத்பவார் பின்பற்ற சுப்ரியாவே முக்கிய காரணம் என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சரத்பவார் கட்சியில் சுப்ரியா சுலேதான் எல்லாமென்றால் தேவேந்திர பட்னாவிஸுக்கு மனைவி சொல்லே மந்திரம். சூப்பர் நிர்வாகி என்று பெயர் எடுத்த பட்னாவிஸின் பின்னணியில் மனைவி அம்ருதா இருப்பதாகச் சொல்கிறார்கள். மும்பைக் கடலில், `ஆங்கிரியா' என்ற கப்பலில் ஆபத்தான பகுதிக்குச் சென்று செல்ஃபி எடுத்து சர்ச்சையில் சிக்கினாரே அதே அம்ருதாவேதான்! மாநில நிர்வாகத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும்போது பட்னாவிஸ் மனைவியுடன் கலந்தாலோசிப்பது வழக்கம். நாக்பூரைச் சேர்ந்தவர் அம்ருதா. அதனால், இயல்பாகவே அம்ருதாவிடம் இந்துத்துவா ஒட்டியிருந்தது.

தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா
தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா

2005-ம் ஆண்டு தேவேந்திர பட்னாவிஸை அம்ருதா திருமணம் செய்தார். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். எம்.பி.ஏ படித்த அம்ருதா, ஆக்ஸிஸ் வங்கியின் துணைத் தலைவர் என்பது கூடுதல் தகவல். டென்னிஸ் வீராங்கனை, பாடகி, சமூகசேவகி எனவும் இவருக்குப் பல முகங்கள் உண்டு. ஆக்ஸிஸ் வங்கியில் சாதாரண எக்ஸிகியூட்டிவாகச் சேர்ந்த அம்ருதா, கடும் உழைப்பால் வங்கியின் துணைத் தலைவர் பதவிக்கு உயர்ந்துள்ளார். 2014-ம் ஆண்டு மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில் கணவருக்காகப் பிரசாரத்திலும் ஈடுபட்டார். பட்னாவிஸ் முதல்வரான பிறகும் தன் வங்கிப் பணியை அம்ருதா விடவில்லை. பொதுவாக, கணவர் அரசியலில் ஈடுபட்டுள்ள சூழலில் அரசியலில் இல்லாத வீட்டுப் பெண்கள் கருத்து சொல்வதில்லை. ஆனால், அம்ருதா தைரியமாக அரசியல் குறித்து கருத்து சொல்வார். பட்னாவிஸ் பதவியை ராஜினாமா செய்ததும் தன் ட்விட்டர் பக்கத்தில், `நாங்கள் மீண்டும் புத்துணர்ச்சியுடன் ஆட்சிக் கட்டிலில் அமர்வோம்' என அம்ருதா ட்வீட் செய்திருந்தார். மகாராஷ்டிர அரசியலில் அடுத்து முக்கியமானவர் யார் என்று பார்த்தால் முதல்வர் உத்தவ் தாக்கரே..! அவர் பக்கம் எட்டிப் பார்த்தாலும் ஒரு பெண்தான் பின்னணியில் இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உத்தவ் தாக்கரேவைப் பொறுத்தவரை, அரசியலில் லேட்- என்ட்ரி ஆனவர். 1990-களில் சிவசேனா தலைவர் பால்தாக்கரேயின் வாரிசாக அவரின் சகோதரர் மகன் ராஜ்தாக்கரேயே கருதப்பட்டார். அரசியலில் ஈடுபடத் தயக்கம் காட்டினார் உத்தவ் தாக்கரே. அவரைக் கட்டாயப்படுத்தி அரசியலுக்குள் கொண்டு வந்தார் பால்தாக்கரே. பின்னர், ராஜ் தாக்கரே ஒதுக்கப்பட அவர் தனிக்கட்சி தொடங்கி சென்றுவிட்டார். தற்போது, மகாராஷ்டிர மாநில முதல்வராக உத்தவ் தாக்கரே ஆகியுள்ளார். இதற்காக, ஆளுநரைச் சந்திக்கச் சென்ற உத்தவ் தாக்கரேயுடன் மனைவி ராஷ்மியும் இருந்தார். விஜயகாந்துக்கு பிரேமலதாபோல உத்தவுக்கு ராஷ்மி. பால்தாக்கரே இருந்தவரை, மாதோஸ்ரீ இல்ல பெண்கள் அரசியலில் தலைகாட்டியதில்லை. அவ்வளவு ஏன்... சொந்த கருத்து என்றுகூட எதையும் உதிர்த்ததில்லை. 2012-ம் ஆண்டு பால்தாக்கரே மறைந்துவிட, உத்தவ் தாக்கரே சிவசேனா தலைவர் ஆனார். ஆக்ரோஷ அரசியல் காட்டத் தெரியாத உத்தவுக்கு, உதவியாக ராஷ்மியும் அரசியலில் குதித்தார்.

2014-ம் ஆண்டு பட்னாவிஸ் முதல்வரானதும் இனிப்பு ஊட்டும் உத்தவ்
2014-ம் ஆண்டு பட்னாவிஸ் முதல்வரானதும் இனிப்பு ஊட்டும் உத்தவ்

விஜயகாந்த் - பிரேமலதா போல இருவரும் தம்பதி சகிதமாக பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வார்கள். ராஷ்மி சிறந்த பேச்சாளரும்கூட. ராஷ்மியிடம் சிவசேனாவின் மூத்த தலைவர் மனோகர் ஜோஷிகூட கைகட்டி வாய்பொத்தி நிற்பதைப் பார்க்க முடியும். இந்த மனோகர் ஜோஷி மகராஷ்டிர மாநில முன்னாள் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. பற்றாக்குறைக்கு இப்போது மகன் ஆதித்யா தாக்கரேயும் எம்.எல்.ஏ ஆகியுள்ளார். ஆக... சிவசேனா மொத்த குடும்பக் கட்சியாக மாறி நிற்கிறது. பால்தாக்கரே இருந்த வரையில், ஆட்சி அதிகாரத்திலிருந்து அவரின் குடும்பத்தினர் ஒதுங்கியிருந்தனர். இப்போது, ஆட்சியும் அதிகாரமும் சிவசேனாவிடம் குவிந்துள்ளது. சிவசேனா முகம் மாறி நிற்பதற்கும் 30 ஆண்டுக்கால நண்பனாக இருந்த பாரதிய ஜனதா கட்சியை உதறியதற்கும் உத்தவுக்கு ராஷ்மி கொடுத்த தைரியம்தான் காரணமென்று சொல்கிறார்கள்!

மனைவியுடன் ஆளுநரை சந்தித்த உத்தவ்
மனைவியுடன் ஆளுநரை சந்தித்த உத்தவ்

மகாராஷ்டிர அரசியல் களத்தில் இப்போது சரத்பவார், உத்தவ் தாக்கரே, தேவேந்திர பட்னாவிஸ் ஆகிய மூன்று பேரும்தான் முக்கியமானவர்கள். இவர்கள் மூன்று பேரின் அரசியல் வெற்றிகளுக்கும் பின்னிருந்து உதவுபவர்கள் பெண்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism