Published:Updated:

கொடூர ‘அரிசி’யல்... கொந்தளிக்கும் புதுச்சேரி மக்கள்!

புதுச்சேரி
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரி

இந்தப் பேரிடர் காலத்திலும் கிரண்பேடி ‘அரிசிக்குப் பதில் பணம்தான் வழங்க வேண்டும்’ என்று அந்த கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பினார்.

கொடூர ‘அரிசி’யல்... கொந்தளிக்கும் புதுச்சேரி மக்கள்!

இந்தப் பேரிடர் காலத்திலும் கிரண்பேடி ‘அரிசிக்குப் பதில் பணம்தான் வழங்க வேண்டும்’ என்று அந்த கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பினார்.

Published:Updated:
புதுச்சேரி
பிரீமியம் ஸ்டோரி
புதுச்சேரி
‘சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்க மாட்டார்’ என்பார்கள். புதுச்சேரி நிலைமை, இப்போது அப்படித்தான் இருக்கிறது. மத்திய அரசே கொரோனா நிவாரணமாக இலவச அரிசி, பருப்பை வழங்க உத்தரவிட்டும், அதற்கு முட்டுக்கட்டை போட்டுவருகிறார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. இது, புதுச்சேரி மக்களை ஆத்திரமடைய வைத்துள்ளது.

புதுச்சேரி முதல்வர் பொறுப்பை ஏற்றதும் அனைத்து ரேஷன் கார்டு களுக்கும் மாதந்தோறும் 20 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த முயன்றார் நாராயணசாமி. ‘அரிசிக்குப் பதில் வங்கிக்கணக்கில் பணமாகச் செலுத்துங்கள்’ என்று கூறி நாராயணசாமியின் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கிரண்பேடி.

நாராயணசாமி - கிரண்பேடி
நாராயணசாமி - கிரண்பேடி

அதனால் ஏற்கெனவே நிதிப் பிரச்னையால் பல ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்த 507 ரேஷன் கடைகளும் நிரந்தரமாக மூடப்பட்டன. அதில் பணிபுரிந்த ஊழியர் களுக்கும் பல ஆண்டு களாக சம்பளம் வழங்கப்பட வில்லை. இந்த நிலையில்தான் நாடெங்கிலும் கொரோனா ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப் பட்டிருக்கும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களுக்கு நபர் ஒருவருக்கு மாதம் ஐந்து கிலோ வீதம் மூன்று மாதத்துக்கான அரிசியும், நபர் ஒருவருக்கு மாதம் ஒரு கிலோ வீதம் மூன்று மாதத்துக்கான பருப்பும் வழங்க உத்தரவிட்டது மத்திய அரசு. இதன் அடிப்படையில் புதுச்சேரிக்கு 9,000 மெட்ரிக் டன் அரிசியை ஒதுக்கியது இந்திய உணவுக் கழகம். அதற்கான கோப்பு தயாரிக்கப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், இந்தப் பேரிடர் காலத்திலும் கிரண்பேடி ‘அரிசிக்குப் பதில் பணம்தான் வழங்க வேண்டும்’ என்று அந்த கோப்பை மத்திய அரசுக்கு அனுப்பினார். மத்திய அரசு மீண்டும் ‘அரிசிதான் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டது. தமிழகம் உள்ளிட்ட பிற மாநில ரேஷன் கடைகளில் இந்த அரிசி விநியோகிக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் புதுச்சேரியில் விநியோகம் சரிவர நடக்கவில்லை.

இதனால் கொந்தளித்துப்போன முதல்வர் நாராயணசாமி, ‘‘ஐந்து கிலோ அரிசி வழங்கும் திட்டத்தில் மிகப்பெரிய குழப்பம் இருக்கிறது. என்னிடமும் அமைச்சர்களிடமும் ஆலோசிக் காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு, அரசுப் பேருந்துகள் மூலம் அரிசியை விநியோகித்து வருகின்றனர் அதிகாரிகள். இதனால் அரிசி வழங்க தாமதமாகும் என்பதால், தலைமைச் செயலர் மற்றும் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை செய்து லாரிகள் மூலம் ஒரு வாரத் துக்குள் வழங்கி முடிக்க உத்தரவிட்டிருக்கிறேன்’’ என்று பேட்டியளித்தார்.

அரிசி வாங்க நீண்ட வரிசை
அரிசி வாங்க நீண்ட வரிசை

அதை சற்றும் பொருட்படுத்தாத அரசு அதிகாரிகள், இன்று வரை அரசுப் பேருந்துகளின் மூலம் அரிசியை விநியோகித்துக்கொண்டிருக் கின்றனர். பருப்பு வழங்கும் பணி இன்னும் தொடங்கப்படவேயில்லை. இந்தச் சூழலில், ‘‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி வழங்குவதை அதிகாரிகள் திட்டமிட்டு காலம் தாழ்த்துகின்றனர். கொரோனா நிவாரணத்தொகை 2,000 ரூபாயை வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டதில் அதிகாரிகள் முறைகேடு செய்திருப்பதாகத் தெரிகிறது. அதுகுறித்த விவரங்களை உடனடியாக வெளியிட வேண்டும்” என்று புதுச்சேரி எம்.பி-யான வைத்திலிங்கம் குற்றம் சுமத்தியிருக்கிறார்.

தி.மு.க எம்.எல்.ஏ-வான சிவா, கோபத்தின் உச்சத்துக்கே சென்று ‘‘அனைத்தையும் கவர்னர் தடுக்கிறார் என்று கூறுவதைவிட, முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ-க்கள் என அனை வரும் டெல்லி சென்று குடியரசுத் தலைவரைச் சந்தித்து ராஜினாமா செய்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும்படி கூறுவோம்’’ என்று கொந்தளித்திருக்கிறார்.

சிவாவிடம் பேசினோம். ‘‘மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியை செயல்படவிடாமல் தடுக்கின்றனர். சுயமரியாதையை இழந்து இந்த ஆட்சியை ஏன் நடத்த வேண்டும்? அதிகாரிகள் தன்னிச்சையாகச் செயல்படுகின்றனர். அரிசி வந்து ஒரு மாதம் ஆகிறது. இதுவரை 10 தொகுதி களில் 20 சதவிகித மக்களுக்குத்தான் அரிசியைக் கொடுத்திருக்கின்றனர். ரேஷன் கடைகள்மூலம் கொடுத்திருந்தால் இந்நேரம் அனைவருக்கும் கொடுத்து முடித்திருக்கலாம்.

‘சம்பளம்கூட வேண்டாம், மக்களுக்காக நாங்கள் அரிசி வழங்குகிறோம்’ என்று ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகின்றனர். ஆனால், அதை அதிகாரிகள் ஏற்க மறுக்கின்றனர். ரேஷன் கடை ஊழியர்களின் மொத்த சம்பள பாக்கியே ஒன்றரைக் கோடி ரூபாய்தான். அதைகூட கொடுக்காதவர்கள் இப்போது வழங்கப்படும் அரிசியை பாக்கெட் செய்வதற்கு ஐந்து கோடி ரூபாய்க்கு தனியாருக்கு ஒப்பந்தம் விட்டிருக்கிறார்கள். இதை எங்கே போய்ச் சொல்வது!” என்றார் ஆதங்கத்துடன்.

இதுகுறித்து, குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குநர் வல்லவனிடம் கேட்டோம். ‘‘அரிசி வழங்கும் பணியைத் துரிதப்படுத்தியிருக்கிறோம். விரைவில் முடித்துவிடுவோம். அரிசியை பாக்கெட் செய்யும் பணியை தனியாரிடம் கொடுத் திருப்பது உண்மைதான். அதுகுறித்த விவரங்களைக் கூற முடியாது” என்றார்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைத் தொடர்புகொண்டபோது, ‘‘விரைவில் பதில் கூறுகிறேன்” என்று வாட்ஸப்பில் தகவல் அனுப்பியதுடன் சரி... பிறகு பதில் தரவே இல்லை.

காலம், எல்லாவற்றுக்கும் ஒரு நாள் பதில் சொல்லும்!