Published:Updated:

`தேர்தல் பிரசாரத்துக்கு குழந்தைகளை பயன்படுத்துவதா?’ - ரிவாபா ஜடேஜா மீது ஜடேஜா சகோதரி காட்டம்

ரவீந்தர் ஜடேஜா - அவரின் மனைவி ரிவாபா ஜடேஜா ( ட்விட்டர் )

``ரிவாபா ஜடேஜா அனுதாபத்தைப் பெறுவதற்காக தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்துகிறார்" - நைனாபா

`தேர்தல் பிரசாரத்துக்கு குழந்தைகளை பயன்படுத்துவதா?’ - ரிவாபா ஜடேஜா மீது ஜடேஜா சகோதரி காட்டம்

``ரிவாபா ஜடேஜா அனுதாபத்தைப் பெறுவதற்காக தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்துகிறார்" - நைனாபா

Published:Updated:
ரவீந்தர் ஜடேஜா - அவரின் மனைவி ரிவாபா ஜடேஜா ( ட்விட்டர் )

குஜராத் மாநில சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ள குஜராத் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 1-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இரண்டாவது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து 8-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

குஜராத்தில் மீண்டும் தனது ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க பல வியூகங்களை வகுத்திருக்கிறது. மேலும் பா.ஜ.க-வினர் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அமித்ஷாவுடன் ரிவாபா - ஜடேஜா
அமித்ஷாவுடன் ரிவாபா - ஜடேஜா
ட்விட்டர்

அதன் ஒருபகுதியாக குஜராத் ஜாம்நகர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளராக இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா அறிவிக்கப்பட்டார். அதே தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக பிபேந்திர சிங் ஜடேஜா போட்டியிடுகிறார். எனவே, காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஜடேஜாவின் சகோதரி நைனாபா ஜாம் நகர் தொகுதியில் பிரசாரத்துக்காக களமிறக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களிடத்தில் பேசிய நைனாபா, "ரிவாபா அனுதாபத்தைப் பெறுவதற்காக தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்துகிறார்.

பிரசாரத்தில் ஜடேஜாவின் சகோதரி நைனாபா
பிரசாரத்தில் ஜடேஜாவின் சகோதரி நைனாபா
ட்விட்டர்

இது ஒரு வகையில் குழந்தைத் தொழிலாளர் முறை என்றுதான் அழைக்கப்படுகிறது. காங்கிரஸ் மூத்த அதிகாரிகள் இந்த விவகாரம் பற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருக்கின்றனர். மேலும், அவரின் அதிகாரப்பூர்வ பெயர் ரிவா சிங் ஹர்தேவ் சிங் சோலங்கி என்பது தான். ஆனால், ஜடேஜா எனும் குடும்பப்பெயரை பயன்படுத்துவதற்காக அடைப்புக்குறிக்குள் வைத்திருக்கிறார்" எனத் தெரிவித்திருக்கிறார்.

ரவீந்திர ஜடேஜாவின் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் நேருக்கு நேர் மோதுவதால் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் அரசியல் நடவடிக்கைகள் தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.