Published:Updated:

மதுரை: ``கட்டமைப்பு சரியில்லாதபோது முதலீட்டாளர்கள் வானத்திலிருந்தா வருவார்கள்?" - ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார் ( வி.ஶ்ரீனிவாசுலு )

`முதலமைச்சரின் அறிவிப்பு மல்லிகைப்பூ மனம்போல் இருக்கவேண்டுமே தவிர காகிதப்பூ போல் இருக்க கூடாது. தொழில்நுட்ப பூங்கா என்பது சிறுவர் பூங்கா அமைப்பது போன்றது அல்ல.' - ஆர்.பி.உதயகுமார்

மதுரை: ``கட்டமைப்பு சரியில்லாதபோது முதலீட்டாளர்கள் வானத்திலிருந்தா வருவார்கள்?" - ஆர்.பி.உதயகுமார்

`முதலமைச்சரின் அறிவிப்பு மல்லிகைப்பூ மனம்போல் இருக்கவேண்டுமே தவிர காகிதப்பூ போல் இருக்க கூடாது. தொழில்நுட்ப பூங்கா என்பது சிறுவர் பூங்கா அமைப்பது போன்றது அல்ல.' - ஆர்.பி.உதயகுமார்

Published:Updated:
ஆர்.பி.உதயகுமார் ( வி.ஶ்ரீனிவாசுலு )

``மதுரை மாட்டுத்தாவணியில் புதிய டைடல் பார்க் அமைக்க முதற்கட்டமாக 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 16-ம் தேதி மதுரையில் நடந்த தென் மண்டல சிறு குறு தொழில் மாநாட்டில் அறிவித்தார்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

இந்த அறிவிப்பு மதுரை மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள நிலையில், கடந்த ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த ஆர்.பி.உதயகுமார் இன்று இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அப்போது அவர், ``தமிழகத்தில் 2.25 லட்சம் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில் மதுரையில் மட்டும் 55,000-க்கும் மேற்பட்டவை உள்ளன. 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. தற்போது 52 சதவிகித மின்கட்டண உயர்வால் இந்த நிறுவனங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரையில் நடந்த தென் மண்டல சிறு குறு நிறுவனங்களின் மாநாட்டில் ரூ.600 கோடி மதிப்பில் டைடல் பார்க் கொண்டுவரப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இது விளம்பர அறிவிப்பாகும். கள ஆய்வு செய்யாமல் டைடல் பார்க் கொண்டுவரப்படும் என முதல்வர் அவசரக்கோலத்தில் அறிவித்ததுள்ளார்.

எடப்பாடியார் ஆட்சியில் மதுரையில் ஏற்கெனவே தகவல் தொழில்நுட்ப பூங்கா கொண்டுவரப்பட்டது. முதலில் அதை முழுமையாகச் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள மாட்டுத்தாவணி அருகே டைடல் பார்க் அமைவது சரியானது அல்ல. தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் அமைத்தால்தான் வளர்ச்சி பெறும். முதலீட்டாளர்களிடம் கருத்து கேட்காமல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைய பல்வேறு அடிப்படை கட்டமைப்புகள் வேண்டும். மதுரை மாநகராட்சியிலுள்ள அனைத்து வார்டுகளிலும் சாலைகள் சரியில்லாமலும் குடிநீர் வசதி இல்லாமலும் சட்ட ஒழுங்கும் கேள்விக்குறியாக உள்ள நிலையில், தற்போது மின்கட்டண உயர்வும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை சரி செய்தால்தான் முதலீட்டாளர்கள் முழுமையாக வருவார்கள்.

ஆர்.பி. உதயகுமார்
ஆர்.பி. உதயகுமார்

கட்டமைப்பு சரியில்லாதபோது முதலீட்டாளர்கள் வானத்தில் இருந்தா வருவார்கள்? ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மதுரை- தூத்துக்குடி பொருளாதார சாலைகள் உருவாக்கப்பட்டன. எடப்பாடியார் ஆட்சிக்காலத்தில் அடிப்படை கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. முதலமைச்சரின் அறிவிப்பு மல்லிகைப்பூ மனம்போல் இருக்கவேண்டுமே தவிர காகிதப்பூ போல் இருக்க கூடாது. தொழில்நுட்ப பூங்கா என்பது சிறுவர் பூங்கா அமைப்பது போன்றது அல்ல" என்று தெரிவித்தார்.