Published:Updated:

`தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் தப்பிக்க வெள்ளை அறிக்கையா?!' - ஆர்.பி.உதயகுமார் காட்டம்

``அம்மாவின் அரசு அமைந்திருந்தால் எடப்பாடியாரும், ஓ.பி.எஸ்-ஸும் சாக்குப் போக்குச் சொல்லாமல் தேர்தல் அறிக்கையில் கூறியபடி மாதம்தோறும் 1,500 ரூபாயும், இலவச வாஷிங்மெஷினும் வழங்கியிருப்பார்கள்” என்கிறார் ஆர்.பி.உதயகுமார்.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

வெள்ளை அறிக்கை வெளியிட்ட பி.டி.ஆர்
வெள்ளை அறிக்கை வெளியிட்ட பி.டி.ஆர்

சொன்னதுபோல் வெள்ளை அறிக்கையை இன்று வெளியிட்டவர், `தமிழக அரசின் ஒட்டுமொத்த கடன் சுமை 5.7 லட்சம் கோடியாக உள்ளது' என்று 120 பக்கங்களில் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்திருப்பது மக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து முன்னாள் முதலமைச்சர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் எந்தக் கருத்தும் வெளியிடாத நிலையில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திமுக அரசை விமர்சித்திருக்கிறார்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆர்.பி.உதயகுமார், ``கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் சாலை வசதி, குடிநீர் வசதிகளை அம்மா அரசு உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. கொரோனா முதல் அலை ஏற்பட்டபோது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று நடவடிக்கை எடுத்ததால் பிரதமரின் பாராட்டை எடப்பாடியார் பெற்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது வெள்ளை அறிக்கை எதற்கு? ஆட்சி அதிகாரம் உங்கள் கையில் இருக்கிறதே... இதைச் சட்டசபையில் விவாதத்துக்கு வைக்கலாமே... நிதிநிலை அறிக்கையில் துறைகளுக்கான நிதி நிலை எவ்வளவு, அதனால் இழப்பு எவ்வளவு என்பதை விவாதத்துக்கு வைத்தால் சட்டமன்றத்தில் விவாதிக்கத் தயாராக இருக்கிறோம். நாட்டு மக்களும் அந்த விவாதத்தை காணத் தயாராக இருக்கிறார்கள்.

வெள்ளை அறிக்கை வெளியிட்ட பி.டி.ஆர்
வெள்ளை அறிக்கை வெளியிட்ட பி.டி.ஆர்

`தேர்தலில் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு இந்த வெள்ளை அறிக்கை தொடக்கப் புள்ளியா அல்லது வாக்குறுதியை நிறைவேற்றாமல் தப்பித்துக்கொள்ள முற்றுப்புள்ளியா...’ என்று மக்கள் இப்போது கேட்கிறார்கள்.

ஆட்சி அதிகாரம் உங்கள் கையில் இருக்கிறது. அதிகாரிகளும் இருக்கிறார்கள். நீங்கள் கேட்டால் எந்தப் புள்ளிவிவரத்தையும் தருவார்கள். வருவாய் எவ்வளவு இருக்கிறது, எவ்வளவு பற்றாக்குறை இருக்கிறது. எவ்வளவு செலவினம் இருக்கிறது, எவ்வளவு கடன் இருக்கிறது... இதுதான் நிதிநிலை அறிக்கையின் சாராம்சம்.

திட்டங்களுக்காக இவ்வளவு ஒதுக்கீடு, உடனடி செலவுக்காக இவ்வளவு நிதி ஒதுக்கப்படவிருக்கிறது, தொலைநோக்குத் திட்டத்துக்கு இவ்வளவு செலவினம் உள்ளது என்பதை நீங்கள் நிதிநிலை அறிக்கையில் எடுத்துச் சொல்லி அதை விவாதிக்கலாம்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

அதைவிடுத்து 2011-லிருந்து ஆட்சியின் நிதி நிலைமையை வெள்ளை அறிக்கையாக விடுவோம் என்று சொல்லி, மக்களை திசைதிருப்பி அதிமுக மீது களங்கத்தைச் சுமத்த நினைத்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

கடந்த 10 ஆண்டுக்கால ஆட்சியில் 52 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி கொடுத்திருக்கிறோம். இரண்டு கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசியை வழங்கியிருக்கிறோம். ஏழைப் பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கினோம். உழவர்களுக்குப் பாதுகாப்புத் திட்டம், மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம் எனப் பல திட்டங்கள்... இப்படி மக்களின் வரவேற்பைப் பெற்ற பல்வேறு திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கிவந்தோம்.

தாய்மார்களுக்காக மாதம்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், அதை இன்னும் நிறைவேற்றவில்லை.

Live Updates: தமிழக அரசின் வெள்ளை அறிக்கை: ``அதிரடி மாற்றங்களுக்கு தமிழக அரசு தயார்!" - பி.டி.ஆர்

அம்மாவின் அரசு அமைந்திருந்தால் எடப்பாடியாரும், ஓ.பி.எஸ்-ஸும் சாக்குப் போக்குச் சொல்லாமல் தேர்தல் அறிக்கையில் கூறியபடி மாதம்தோறும் 1,500 ரூபாயும், அதேபோல் இலவச வாஷிங்மெஷினும் வழங்கியிருப்பார்கள்.

அதுதான் அம்மா அரசுக்கும், திமுக அரசுக்கும் உள்ள வித்தியாசம். 2011 முதல் அம்மா அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. வெள்ளை அறிக்கை என்ற பெயரில் எங்கள்மீது பழி போட நினைத்தால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்று பேசினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு