Published:Updated:

``நடுநிலையாகச் செயல்படாத உங்கள் சட்டையைக் கழற்றும்வரை போராடுவோம்!"- எச்சரிக்கும் ஆர்.பி.உதயகுமார்

ஆர்.பி.உதயகுமார்

``அரசு அதிகாரிகளும், காவல்துறையும் தப்புக் கணக்கு போட்டுவிட்டார்கள். நீங்கள் நடுநிலையோடு நடந்துகொள்ளாவிட்டால் உங்களது சட்டையைக் கழற்றும்வரை நாங்கள் போராடுவோம்." - ஆர்.பி.உதயகுமார்

``நடுநிலையாகச் செயல்படாத உங்கள் சட்டையைக் கழற்றும்வரை போராடுவோம்!"- எச்சரிக்கும் ஆர்.பி.உதயகுமார்

``அரசு அதிகாரிகளும், காவல்துறையும் தப்புக் கணக்கு போட்டுவிட்டார்கள். நீங்கள் நடுநிலையோடு நடந்துகொள்ளாவிட்டால் உங்களது சட்டையைக் கழற்றும்வரை நாங்கள் போராடுவோம்." - ஆர்.பி.உதயகுமார்

Published:Updated:
ஆர்.பி.உதயகுமார்

எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருமங்கலம் அருகிலுள்ள டி.கல்லுப்பட்டியில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "தொடர்ந்து 10 வருடங்கள் ஆளுங்கட்சியாக இருந்து, இந்தப் பகுதியில் பல சேவைகளைச் செய்திருக்கிறோம். புரட்சித் தலைவரைப் பற்றி பேசுகின்ற இந்தப் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்குப் பல தடைகளைத் தாண்டி வரவேண்டியிருக்கிறது.

பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டம்

அரசு அதிகாரிகளும், காவல்துறையும் தப்புக் கணக்கு போட்டுவிட்டார்கள். நீங்கள் நடுநிலையோடு நடந்து கொள்ளாவிட்டால் உங்களது சட்டையைக் கழற்றும்வரை நாங்கள் போராடுவோம். அராஜக ஆட்சியை ஒழித்து மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வரும்.

எங்கிருந்து அழுத்தம் வருகிறது என எங்களுக்குத் தெரியும். நாங்கள் கூட்டம் நடத்தி இரண்டாயிரம் பேர், ஐயாயிரம் பேரை திரட்டுகிறோம். ஆளுங்கட்சியைச் சேர்ந்த நீங்களும் ரோசப்பட்டு பத்தாயிரம் பேரை திரட்டுங்கள்.

பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டம்

அதைவிட்டு கூட்டம் நடத்தக் கூடாதுன்னு சொல்வதற்கு நீங்கள் என்ன, உங்கள் தாத்தா வந்தாலும் முடியாது. நாங்கள் நடத்திக்கொண்டேதான் இருப்போம். மக்களோடு மக்களாக இருக்கிறோம். எங்கிருந்து அழுத்தம் வருகிறது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். 

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகளுடன் 10 ஆண்டுகள் நிர்வாகம் செய்து, அந்த நிர்வாகத்தைக் கரைத்துக் குடித்து அம்மா கற்றுத்தந்த பாடத்தோடுதான் இங்கே நின்றுகொண்டிருக்கிறோம். சட்டத்துக்கு அடிபணிந்து நாங்கள் இந்திய குடிமகனாகப் பணியாற்றிவருகிறோம். 

நடுநிலையோடு இருக்கின்ற அரசு அலுவலர்களே தப்புக் கணக்கு போட்டுவிட்டீர்கள். தப்புத்தாளங்களைப் போட்டுவிட்டு பின்பு மாட்டிக்கொள்ளாதீர்கள். மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வரும். வெறும் 1,92,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஆட்சியை இழந்தோம். இன்றைக்கு ஸ்டாலின் முதலமைச்சராகவும்,  எடப்பாடியார் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கிறார்கள். நாளையே தேர்தல் வைத்தால் எடப்பாடியார்  முதலமைச்சராக வருவார்.

அ.தி.மு.க ஆட்சியில் வழங்கிய முதியோர் உதவித் தொகையை ரத்துசெய்தது குறித்து மக்கள் கேட்டால், `தி.மு.க-வுக்கு ஓட்டு போடாததால் ரத்து செய்தோம்' எனக் கூறுகிறார்கள். `இனி தி.மு.க-வினரிடம் மட்டும் ஓட்டு கேட்போம், பொதுமக்களிடம் ஓட்டு கேட்க மாட்டோம்' என்று தி.மு.க-வினர் சொல்லிவிட்டால், உங்களை எந்தக் குற்றமும் சொல்ல மாட்டோம்.  

ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் ஆகியும் தாய்மார்களுக்கு உதவித் தொகை வரவில்லை. கம்ப்யூட்டர் தந்த எங்களை மறந்துவிட்டு கல்விக்கடன் ரத்து என்பதை நம்பி இளைஞர்கள் தி.மு.க-வுக்கு வாக்களித்தார்கள். இன்றைக்கு அவர்களும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். 

பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டம்

மின்சாரக் கட்டணம், சொத்துவரி உயர்த்தியதைப் பற்றி கேட்டால், மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக தி.மு.க-வினர் கூறுகிறார்கள். ஆனால், எடப்பாடியார் ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசு அழுத்தம் கொடுத்தபோது, `என் தாய் தமிழ்நாட்டு மக்கள் மீது சொத்துவரியை திணிக்கமாட்டேன், தமிழக அரசே அதை ஏற்றுக்கொள்ளும்' எனச் சொன்ன தலைவன் எடப்பாடியார்.

50 ஆண்டுக்கால திராவிட ஆட்சியில் தமிழகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால், அதில் அ.தி.மு.க 31 ஆண்டுக்காலம் ஆட்சிசெய்து மக்களுக்கு பல்வேறு திட்டங்களைத் தந்தது.

தி.மு.க-வின் நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் மக்கள், ஒரு முடிவெடுத்துவிட்டால், நியாயமான தீர்ப்பை வழங்குவார்கள். விளம்பர வெளிச்சத்தில் தற்போதிருக்கும் தி.மு.க-வின் மக்கள் விரோத அரசு நீண்டகாலம் நிலைக்காது" என்றார்.