Published:Updated:

``எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு அமைச்சர் ஏளனமாகப் பேசுகிறார்!" - ஆர்.பி.உதயகுமார் கண்டனம்

தங்கம் தென்னரசு, ஆர்.பி.உதயகுமார்

`அரசின் அலட்சியங்களை, தவறுகளை சுட்டிக்காட்டுவதுதான் எதிர்கட்சித் தலைவரின் தார்மீக உரிமைமையாகும். இதற்கு தொழில்துறை அமைச்சர் ஏளனமாகவும், ஏகடியமாகவும் பேசியிருப்பது சர்வாதிகாரமானது.' - ஆர்.பி.உதயகுமார்

``எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு அமைச்சர் ஏளனமாகப் பேசுகிறார்!" - ஆர்.பி.உதயகுமார் கண்டனம்

`அரசின் அலட்சியங்களை, தவறுகளை சுட்டிக்காட்டுவதுதான் எதிர்கட்சித் தலைவரின் தார்மீக உரிமைமையாகும். இதற்கு தொழில்துறை அமைச்சர் ஏளனமாகவும், ஏகடியமாகவும் பேசியிருப்பது சர்வாதிகாரமானது.' - ஆர்.பி.உதயகுமார்

Published:Updated:
தங்கம் தென்னரசு, ஆர்.பி.உதயகுமார்

``அரசின் அலட்சியங்களை, தவறுகளை சுட்டிக்காட்டுவதுதான் எதிர்கட்சித் தலைவரின் தார்மீக உரிமைமையாகும். இதற்கு தொழில்துறை அமைச்சர் ஏளனமாகவும், ஏகடியமாகவும் பேசியிருப்பது சர்வாதிகாரமானது" என்று கண்டித்திருக்கிறார் அ.தி.மு.க சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார்.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்
வி.ஶ்ரீனிவாசுலு

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``நிர்வாக குளறுபடிகளை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிமை உண்டு. அதற்கு முதலமைச்சரும், சம்பந்தப்பட்ட அமைச்சரும் விளக்கம் தருவது தார்மீக கடமை.

தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய வேதாந்தா, ஃபாக்ஸ்கான் நிறுவனங்களின் இரண்டு லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகள் மகாராஷ்டிரா மாநிலத்துக்குச் சென்றுவிட்டன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதன் மூலம் இரண்டு லட்சம் இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை நாம் இழந்தோம் என்று தி.மு.க அரசின் நிர்வாக குளறுபடிகளை சுட்டிக்காட்டி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் விரிவான அறிக்கையை வெளியிட்டிருந்தார். 

இதற்கு பதில் அளித்திருக்கும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தெளிவான விளக்கத்தைச் சொல்லாமல் குழப்பமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

தங்கம் தென்னரசு
தங்கம் தென்னரசு

குறிப்பாக, வேதாந்த நிறுவனத்துக்கு சுற்றுச்சூழலை பாதிக்கும் காரணங்களுக்காக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதற்கான இசைவினை வழங்க மறுத்திருக்கிறது என்றும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஃபாக்ஸ்கான் நிறுவனம் மின் வாகன உற்பத்தி திட்டங்களை தமிழ்நாட்டில் நிறுவ பரிசீலிப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்திருப்பதாகக் கூறியிருக்கிறார். இதன்மூலம் தொழில் தொடங்கவில்லை என்பது உண்மை நிலையாகும்.

அரசின் அலட்சியங்களை, தவறுகளை சுட்டிக்காட்டிய எதிர்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர், `நிர்வாகம் தெரியவில்லை' என்று ஏளனமாகவும், ஏகடியமாகவும் பேசியிருக்கிறார். வேதாந்தா, ஃபாக்ஸ்கான் நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வரவில்லை என்பதை நடுநிலை நாளிதழ்கள் வெளியிட்டிருக்கின்றன. அமைச்சரும் இதை படித்திருப்பார். இது தமிழ்நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியிருப்பததை சுட்டிக்காட்டியிருக்கிறார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார்.

ஆனால், உரிய விளக்கம் தராமல், சர்வாதிகார போக்குடன் ஜனநாயகத்துக்கு விரோதமாக பதிலளித்திருக்கிறார் தொழில்துறை அமைச்சர்.

தங்கம் தென்னரசு, ஆர்.பி.உதயகுமார்
தங்கம் தென்னரசு, ஆர்.பி.உதயகுமார்

48 ஆண்டுக்கால அரசியல் பொது வாழ்வில் தன்னை அர்ப்பணித்து அரசியலில் எந்த பின்புலமும் இல்லாமல் நெருப்பாற்றில் நீந்தி மக்கள் பணியாற்றி சாமான்ய முதல்வராய் கடந்த நான்கரை ஆண்டுக்காலம் சரித்திர சாதனை படைத்து, பல திட்டங்களை உருவாக்கி, மாணவர்கள், விவசாயிகள், தாய்மார்கள், தொழிலாளர்கள் என மக்கள் போற்றும் தலைவராக எடப்பாடியார் உள்ளார்.

 மக்களின் கோரிக்கைகளையும், தமிழ்நாடு அரசின் அவலங்களையும் அரசின் கவனத்துக்கு தார்மீக அடிப்படையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் கொண்டு வருகிறார். அதற்கு முதலமைச்சர் பதில் கூறுவதில்லை, கேள்வி கேட்க சட்டமன்ற எதிர்க்கட்சிதலைவருக்கு உரிமை உள்ளது . அதற்கு முதலமைச்சரும், அமைச்சர்களும் பதில் கூறுவதுதான் அரசியல் நாகரிகம் ஆகும். ஆளுங்கட்சியாக உங்களை தேர்ந்தெடுத்த மக்கள்தான், எங்களையும் எதிர்கட்சியாக தேர்ந்தெடுத்துள்ளார்கள். என்பதை சுட்டிக்காட்டுகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.