Published:Updated:

சாவர்க்கர்: ``இந்திரா காந்தி, மகாத்மாவின் கடிதத்தைப் படியுங்கள்" - ராகுலுக்கு பட்னாவிஸ் அறிவுரை

முதல்வர் ஷிண்டேயுடன் பட்னாவிஸ்

சாவர்க்கர் குறித்து இந்திரா காந்தி, மகாத்மா காந்தியின் கடிதத்தைப் படிக்கும்படி ராகுல் காந்திக்கு மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவுரை வழங்கியிருக்கிறார்.

சாவர்க்கர்: ``இந்திரா காந்தி, மகாத்மாவின் கடிதத்தைப் படியுங்கள்" - ராகுலுக்கு பட்னாவிஸ் அறிவுரை

சாவர்க்கர் குறித்து இந்திரா காந்தி, மகாத்மா காந்தியின் கடிதத்தைப் படிக்கும்படி ராகுல் காந்திக்கு மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அறிவுரை வழங்கியிருக்கிறார்.

Published:Updated:
முதல்வர் ஷிண்டேயுடன் பட்னாவிஸ்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். இந்த யாத்திரை தற்போது மகாராஷ்டிராவில் நடக்கிறது. நாளை மத்தியப் பிரதேசத்துக்குச் செல்கிறது. கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சுதந்திரப் போராட்ட தியாகி வீர் சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி தெரிவித்திருந்த கருத்துகள் மகாராஷ்டிரா அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கின்றன. ராகுல் காந்தி தொடர்ந்து இதுபோல் பேசினால் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று சிவசேனா எச்சரித்திருக்கிறது. `ராகுல் காந்தியின் கருத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லை’ என்று உத்தவ் தாக்கரே தெரிவித்திருக்கிறார். சாவர்க்கருக்கு எதிரான கருத்துக்காக ராகுல் காந்தி மீது மும்பை அருகேயுள்ள தானேயில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி எழுதிய கடிதம்
மகாத்மா காந்தி எழுதிய கடிதம்

இது குறித்து மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், ``மகாத்மா காந்தி ஆங்கிலேயருக்கு எழுதிய கடிதத்தில், `ஐயா நான் உங்களின் மிகவும் கீழ்ப்படிந்த வேலைக்காரனாக இருக்க விரும்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். சாவர்க்கர் எழுதிய கடிதத்தின் கடைசிவரிகளைப் படிக்கச் சொல்லும் ராகுல் காந்தி, உங்களின் மதிப்புக்குரிய மகாத்மா காந்தி எழுதிய கடிதத்தின் கடைசிவரிகளையும் படியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதோடு மகாத்மா காந்தி 1920-ம் ஆண்டு எழுதியாகக் கூறப்படும் கடிதம் ஒன்றையும் பகிர்ந்திருக்கிறார். மேலும் 1980-ம் ஆண்டு மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எழுதிய கடிதம் ஒன்றையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். இதில் இந்திரா காந்தி, சுதந்திரப் போராட்டத்தில் வீர் சாவர்க்கர் தூணாகச் செயல்பட்டதாகவும், இந்தியாவின் மதிப்புமிக்க மகன் என்றும் குறிப்பிட்டிருப்பதை பட்னாவிஸ் சுட்டிக்காட்டியிருக்கிறார். மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்கள், சரத் பவார் ஆகியோரும் சாவர்க்கரைப் பாராட்டியிருப்பதைச் சுட்டிக்காட்டியிருந்தார். பிரச்னை பெரிய அளவில் சர்ச்சையாகியிருப்பதால் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ``சாவர்க்கரை ராகுல் காந்தி தாக்கிப் பேசவில்லை. வரலாற்று உண்மைகளை எடுத்துக் கூறினார்” என்று தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சே சாவர்க்கரின் கொள்கையால் கவரப்பட்டவர். சாவர்க்கரின் கொள்கை, காந்தியின் கொலைக்குக் காரணமாக இருந்தது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.