
பண்றது தப்புன்னு சொல்றவங்களைக் கட்சியிலருந்து உடனே நீக்கிடுவோம்.
ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

@saravankavi
மோடி: நான் என்ன சொன்னேன்னு கேப்பாங்க... எதுவுமே சொல்லிடாதீங்க. மீடியால்லாம் மைக்கை வாய்க்குள்ள நீட்டிக்கூடக் கேப்பாங்க... அப்பவும் சொல்லிடாதீங்க.
பைடன்: ஏங்க... நீங்கதான் எதுவுமே சொல்லலையேங்க..?
மோடி: அதைக்கூடச் சொல்லிடாதீங்க!
@h_umarfarook
மோடி: ஒரு தடவைதான் சொல்லுவேன் நல்லா கேட்டுக்கோங்க... என் முன்னாடி எப்பவும் கேமராவை மறைச்சு நிக்காதீங்க!
@LAKSHMANAN_KL
பைடன்: உங்க ஆட்சி தூய்மையானதுன்னு எப்படிச் சொல்றீங்க?
மோடி: அதான் மீம் கிரியேட்டர்ஸ் டெய்லி எங்க ஆட்சியைக் கழுவிக் கழுவி ஊத்துறாங்களே?!
@mohanramko
பைடன்: உங்ககிட்ட யாரும் நெருங்க முடியாதாமே?
மோடி: ஆமாம், என்னை நெருங்கக்கூடியவர் கேமராமேன் ஒருவர் மட்டுமே.
@saravankavi
மோடி: எங்க கட்சியில தப்பு பண்ணுனா உடனே தண்டனை!
பைடன்: என்ன தண்டனை?
மோடி: பண்றது தப்புன்னு சொல்றவங்களைக் கட்சியிலருந்து உடனே நீக்கிடுவோம்.
@parveenyunus
பைடன்: 2024 தேர்தல்ல ஆண்டவன் உங்களுக்குத் துணை நிற்பானா?
மோடி: ஆண்டவன் நிற்பானான்னு தெரியாது... அம்பானி, அதானி கண்டிப்பா நிற்பாங்க.
@Vasanth920
பைடன்: கண்டிப்பா நீங்க அமெரிக்காவுக்கு வரணும்.
மோடி: ஓகே. ஆனா, ஒரு கண்டிஷன். ஏர்போர்ட்ல மீடியா இருக்கக் கூடாது.
@JaNeHANUSHKA
பைடன்: 100-வது சுதந்திர தினத்தில், இந்தியா வல்லரசு ஆகும்னு உங்க அமைச்சர் எல்.முருகன் சொல்லியிருக்காரே... அப்படி ஆகலைன்னா?
மோடி: ஆகலைன்னா... `எல்லாத்துக்கும் நேருதான் காரணம்’னு சொல்லிடுவோம்.
@RavindranKanna2
மோடி: வாங்க மிஸ்டர் பைடன்... புதிய உலகைக் கட்டமைப்போம்!
பைடன்: முதலில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டி முடிக்கிற வழியைப் பாருங்க!
Ravikumar Krishnasamy
மோடி: ஒரு நிமிஷம் அப்படியே இருங்க... அசையாதீங்க... நம்மளை போட்டோ எடுக்குறாங்க!”
Ravindran Kannan
பைடன்: உங்கள் கட்சி வளர நீங்கள் நடைப்பயணம் மேற்கொள்ள வில்லையா?
மோடி: நான்தான் நாடு நாடாக விமானப் பயணம் மேற்கொள்கிறேனே... போதாதா?
Ambai Deva
பைடன்: அடுத்த தேர்தலிலும் நானே ஜெயிக்க வழி சொல்லுங்க ஜி!
மோடி: ஒவ்வோர் அமெரிக்கருக்கும் அவங்கவங்க வங்கிக் கணக்குல 15 லட்சம் டாலர் வரவு வைக்கறதா சும்மா அடிச்சுவிடுங்க ஜி!
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.
Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan