
`மாண்பமை நீதிமன்றத்துக்கு... இனி பொதுக்குழுக் கூட்டங்களில் தண்ணீர் பாட்டிலை உபயோகிக்கத் தடை விதிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.’
ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!
@amuduarattai
‘ஓ.பி.எஸ்-ஸைக் கட்சியைவிட்டு நீக்கியவர்கள் ரத்தம் கக்கிச் சாவார்கள்!’ - இப்படிக்கு, ஓ.பி.எஸ்
@RavindranKanna2
`அன்புள்ள மோடி ஜி... எனது சுயசரிதைக்கு இவற்றில் எதை டைட்டிலாக வைக்கலாம்... 1.சூது கவ்விய தர்மயுத்தம், 2.தேநீர்க் கடையிலிருந்து கோட்டைக்கு, 3.கோட்டையைக் கோட்டைவிட்டது எப்படி? 4.பொல்லாத பொதுக்குழுக் கூட்டம்.’
@LAKSHMANAN_KL
`அன்புள்ள நட்டா ஜி, பா.ஜ.க-வுக்கு ஒரு தலைமை, அ.தி.மு.க-வுக்கு ஒரு தலைமை என இரட்டைத் தலைமை வேண்டாம். நீங்களே ஒற்றைத் தலைமையாக இருந்து இரண்டையும் வழிநடத்துங்கள்!’
@RavindranKanna2
`அன்புள்ள ஸ்டாலின், உதயநிதியை நீங்கள் அமைச்சராக்கியதற்கு எனது வாழ்த்துகள். அமைச்சர் பதவி கிடைக்காத ஒரு மகனின் மனசு எப்படி வலிக்கும் என்று எனக்குத்தான் தெரியும்.’
@amuduarattai
`அன்புள்ள சின்னம்மா... போனில் பேசினால் அடுத்த நொடியே ஆடியோ ரிலீஸாகிவிடுவதால், இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். மற்றவற்றை கூவத்தூர் ரிசார்ட்டில் நேரில் பேசுவோம்...’
@adiraibuhari
`உயர்திரு மோடி அவர்களுக்கு, நான் கையில் கட்டியிருக்கும் சாதாரண வாட்ச்சைப் பார்த்தாலே தெரியும். அண்ணாமலை அளவுக்கு நான் பிரச்னை செய்கிற ஆள் இல்லை என்று. எனவே, அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் பதவியை...’
Sathia Moorthi
`மாண்பமை நீதிமன்றத்துக்கு... இனி பொதுக்குழுக் கூட்டங்களில் தண்ணீர் பாட்டிலை உபயோகிக்கத் தடை விதிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.’
M Peter Francisca
`ஐயய்யோ... என் லெட்டர் பேடுல இன்னும் `துணை முதல்வர்’னுல்ல இருக்கு. உதயநிதி தம்பி பார்த்தா பெரிய வம்பாப்போயிடுமே!’
Ravikumar Krishnasamy
`பதவி போனதிலிருந்து, எதிலாவது கையெழுத்து போடணும்போலவே இருக்கே... சரி, கோலம் போட்டாவது பழகுவோம். பொங்கலுக்குப் பயன்படும்.’
Vaira Bala
ஓ.பி.எஸ் மைண்ட்வாய்ஸ்: ‘அமைதிப்படை’ படத்தை ரெண்டு முறை பார்த்து வெச்சுருந்தா, இந்த நிலைமை நமக்கு வந்திருக்காதோ?!’
Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.