அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

போட்டோ தாக்கு

ஆர்.என்.ரவி - ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.என்.ரவி - ஸ்டாலின்

‘காவி’ கலர்ல கார்பெட் போடலேன்னு கோவிச்சுக்கிட்டு கிளம்பிடுவாரோ?

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@parveenyunus

ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ்: ‘காவி’ கலர்ல கார்பெட் போடலேன்னு கோவிச்சுக்கிட்டு கிளம்பிடுவாரோ?

@mohanramko

ஸ்டாலின்: உள்ள வாங்க கவர்னர்!

ரவி: அட போங்கங்க... உங்ககிட்ட ஓப்பனிங்கெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, ஃபினிஷிங் சரியில்லையே.

@saravankavi

ஆளுநர்: எனக்கு பெரியார், சமூகநீதி, அண்ணா, மாநில சுயாட்சி, தமிழ்நாடு, திராவிட மாடல்னா மட்டும்தாங்க பயம்... மத்தபடி ஐ லவ் தமிழகம்ங்க!

@ParveenF7

ஸ்டாலின்: என்ன பாக்குறீங்க... உங்களுக்குத்தான் பெரியார் மண்ணுன்னா பிடிக்காதே... அதான் அதை நீங்க கண்ணால பாக்கக் கூடாதுன்னு கார்பெட் போட்டு மூடிட்டோம்.

@RahimGazzali

முதல்வர்: இந்த வாரம் எந்தப் படத்துக்குப் போறீங்க... `வாரிசா’... `துணிவா’?

ரவி: இல்லைங்க... ஓடிடி-ல `காஷ்மீர் ஃபைல்ஸு’ம் `காந்தாரா’வும் பாக்கப்போறேன்!

@h_umarfarook

ஸ்டாலின்: தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது என்பதை ஏன் படிக்காமல் விட்டீங்க?

ஆளுநர்: `தமிழ்நாடு பா.ஜ.க-வில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை’ன்னு காயத்ரி ரகுராம் சொன்னதுக்கப்புறமும் நான் எப்படி அப்படி வாசிக்க முடியும்?

@RahimGazzali

ஸ்டாலின்: சட்டசபையிலருந்து செம ஸ்பீடா ஓடுனீங்கபோல?

ரவி: ஐ.பி.எஸ் ட்ரெயினிங்லகூட அவ்ளோ ஸ்பீடா ஓடுனதில்லீங்க.

@balasubramni1

ரவி: என்னை எதுக்கு ‘நிழல்கள் ரவி’னு சொல்றீங்க?

ஸ்டாலின்: ஒன்றிய அரசின் நிழல்போலச் செயல்படுறீங்களே... அதான்!

FACEBOOK

Bala Murugan Kannan

முதல்வா்: ஏதோ... உங்களை வெச்சுத்தான் மக்களுக்குத் தோ்தல் அறிக்கை நினைவுக்கு வராத மாதிரி பாத்துக் கிட்டிருக்கோம். இப்பிடியே தொடர்ந்து பண்ணுங்க!

Vaira Bala

ரவி: இங்கே என்ன புதிதாகப் பாதை?

ஸ்டாலின்: புது சுரங்கப் பாதை. சட்டசபைலருந்து நீங்க எழுந்து ஓட வசதியா இருக்கட்டுமேன்னு.

M Peter Francisca

ஸ்டாலின்: எதுக்கு மெதுவா நடக்குறீங்க ஜி?

ரவி: சட்டசபை என்றால்தான் எனக்கு வேகமா நடக்க வரும்.

VKarthik

ஆர்.என்.ரவி: எனக்குக் கோவம் வராது.

ஸ்டாலின்: வந்தா என்ன பண்ணுவீங்க?

ஸ்டாலின்: உடனே ஸ்பாட்டவிட்டுக் கிளம்பிடுவேன்!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan