அரசியல்
Published:Updated:

போட்டோ தாக்கு

போட்டோ தாக்கு
பிரீமியம் ஸ்டோரி
News
போட்டோ தாக்கு

பன்னீர் பரோட்டோ, பன்னீர் சாலட், பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் புலாவ், பன்னீர் டிக்கா, பன்னீர் கட்லெட்...

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@amuduarattai

தி.சீனிவாசன்: அவரு மோடியை இப்பத்தான் பார்த்துட்டு வாராருன்னு எப்படிச் சொல்றீங்க?

இ.பி.எஸ்: அவர் மாதிரி கூடவே கேமராமேனையும் கூட்டிட்டு வர்றதை வெச்சுத்தான்!

@parveenyunus

இ.பி.எஸ் மைண்ட் வாய்ஸ்: அம்மா கால்ல ஆயிரம் தடவை விழுந்தவன்லாம் சந்தோஷமா இருக்கான். ஒரே ஒரு தடவை சின்னம்மா கால்ல விழுந்துட்டு நான் வாங்குற மீம்ஸ் இருக்கே... ஐய்யய்யய்யோ!

@saravankavi

இ.பி.எஸ்: சாப்பிட என்ன இருக்கு?

தி.சீனிவாசன்: பன்னீர் பரோட்டோ, பன்னீர் சாலட், பன்னீர் பட்டர் மசாலா, பன்னீர் புலாவ், பன்னீர் டிக்கா, பன்னீர் கட்லெட்...

இ.பி.எஸ்: இது எல்லாத்துலயும் ஒரு பிளேட் பன்னீர் இல்லாம கொண்டுவாங்க.

@h_umarfarook

சீனிவாசன்: என்ன தலைவரே அவரை ஆச்சர்யமாப் பார்க்குறீங்க?

எடப்பாடி: இவர் இவ்வளவு உயரமானா ஆளா?

சீனிவாசன் (மனதுக்குள்): அவரும் நிமிர்ந்து நடந்ததே இல்ல... நீங்களும் நிமிர்ந்து பார்த்ததே இல்ல. அப்புறம் எப்படித் தெரியும்?

@amuduarattai

இ.பி.எஸ்: ஜல்லிக்கட்டு நாயகர், காளையை அடக்கப்போகாமல், இங்கே வந்திருக்கிறாரே?

தி.சீனிவாசன்: நீங்ககூடத்தான் விவசாயி. நீங்க உழவர் திருநாளைக் கொண்டாடப்போகாமல இங்கே வரலையா.... அதுபோலத்தான்.

@ParveenF7

சீனிவாசன்: ஓ.பி.எஸ்-ஸைப் பார்த்ததும் ஏன் கையைக் கட்டுறீங்க தலைவரே?

இ.பி.எஸ்: கவர்னர் கூப்பிட்டு இவர்கூட கைகுலுக்க வெச்சுட்டார்னா... அதான்!

FACEBOOK

Sathia Moorthi

இ.பி.எஸ் (மைண்ட் வாய்ஸ்) என்ன இருந்தாலும், சட்டமன்றத்துலருந்து வெளியேறிப்போன கவர்னர் ஸ்பீடுக்கு நடக்க முடியாது!

Sathia Moorthi

இ.பி.எஸ் (மைண்ட் வாய்ஸ்): ராகுல் காந்தி நடைப்பயணத்துக்கு ஆதரவு தெரிவித்து ஓ.பி.எஸ் நடந்து வர்றார்னு ஒரு ஸ்டேட்மென்ட் விட்டு, அவரை பா.ஜ.க-வுக்கு எதிரியாக்கிடலாமா!?

அதிரை புகாரி

எடப்பாடி (மைண்ட் வாய்ஸ்): இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொள்ளையுமா அலையணும்?

Ambai Deva

தி.சீனிவாசன்: இதெல்லாம் ஒரு பார்ட்டியாண்ணே!

எடப்பாடி: ஏன்... என்னாச்சு?

தி.சீனிவாசன்: ஒரு காலி தண்ணி பாட்டில்கூட அவசரத்துக்குக் கிடைக்க மாட்டேங்குதே!

திண்டுக்கல் சௌந்தர்

“ஒரே ஒரு தர்மயுத்தம் வர்றார் வழிய விடுங்கோ..!”

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan