அலசல்
Published:Updated:

போட்டோ தாக்கு

ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓ.பன்னீர்செல்வம்

``அண்ணாமலை வந்து பிரசாரம் பண்ணப் போறாராம். அதையும் மீறி அவங்க எப்படி ஜெயிக்கப்போறாங்கன்னு பார்த்துடுறேன்.’’

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

@LAKSHMANAN_KL

`` ‘கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழார்’னு சொன்னவரைத்தான் இந்த உலகம் நம்புது. அதனால, ‘சிலப்பதிகாரத்தை எழுதியது சிலம்பரசன்தான்’னு சொல்லி நாமளும் நம்பிக்கையைப் பெறப் பார்ப்போம்..!’’

@Vkarthik_puthur

``எல்லாத்துக்கும் ‘பணிந்து’போன நாம... ‘தவழ்ந்து’ போயிருந்தா இப்படியொரு நிலைமை நமக்கு வந்துருக்குமா?!’’

@h_umarfarook

`` `ஒரு டீக்கடைக்காரர் மனசு இன்னோரு டீக்கடைக்காரருக்குத்தான் தெரியும்’னு சொன்னாரே... கடைசியில அதுவும் வடையா?!’’

@parveenyunus

``பையனோட எம்.பி பதவி அடுத்த வருஷம் முடியப்போவுது. ஆனா, நம்ம அரசியல் வாழ்க்கை இந்த வருஷமே முடிஞ்சுடும்போலிருக்கே!’’

@JaNeHANUSHKA

``அண்ணாமலை வந்து பிரசாரம் பண்ணப் போறாராம். அதையும் மீறி அவங்க எப்படி ஜெயிக்கப்போறாங்கன்னு பார்த்துடுறேன்.’’

@h_umarfarook

``தம்பி இங்க வா... இன்னைக்குக் காதலர் தினமாம். போயி ஒரு தாமரைப்பூ வாங்கிட்டு வா.’’

@LAKSHMANAN_KL

`` `காஸ்ட்ரோ, சே குவேரா’னு சொன்னாங்க. இப்ப காஸ்ட்ரோ அந்த அணியில இருக்காரு. சேப்பாக்கம் சே குவேரா தி.மு.க-வுல இருக்காரு. நான் மட்டும் தனியா இருக்கேன்.

@absivam

``அடடா... அம்மா போட்டாவுக்கு பதிலா, பா.ஜ.க உறுப்பினர் அட்டையை எடுத்துட்டு வந்துட்டேனே?!’’

FACEBOOK

Soma Sundaram

``என்ன... என் பாக்கெட்டுல மோடி படம் தெரியுதா... அம்மா படம்தானே வெச்சுட்டு வந்தேன்.ஒருவேளை மனசுக்குள்ள இருக்குறதுதான் சட்டையைத் தாண்டி வெளியில தெரியுதோ?!’’

Mannargudi Rajagopal

``என்னது, சீமான் என்னைச் சந்திக்க வர்றாரா... அப்ப பேனாவை மறைச்சுவெப்போம்.பேனாவைக் கண்டாலே உடைக்கணும்னு அடம் பிடிப்பார்.’’

Sathia Moorthi

``பாக்கெட்டுல யார் போட்டோ இருந்தா என்ன... அமித் ஷா எங்க கட்சியையே அவர் பாக்கெட்டுலதான வெச்சுருக்காரு!”

Riyaz Ahmed

``பாக்கெட்ல எப்படி கடலை வந்துருக்கும்... மிக்ஸர் சாப்பிடும்போது தவறி விழுந்துருக்குமோ?!’’

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.