அலசல்
Published:Updated:

போட்டோ தாக்கு

உதயநிதி ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
உதயநிதி ஸ்டாலின்

“ஆமாம் அங்கிள்... ரொம்ப நாள் கழிச்சு ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை கே டி.வி-யில பார்த்தேன். அதான்!

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

TWITTER

@balasubramni1

பி.டி.ஆர்: காங்கிரஸ் கட்சிக்காரர்களை ஒரு நாள் மட்டும் ஷூட்டிங்குக்குக் கேட்டீங்களாமே?

உதயநிதி: ஆமாண்ணே. `மாமன்னன்’ படத்துல கோஷ்டிச் சண்டை போடுறது மாதிரி ஒரு காட்சி இருக்கு. தத்ரூபமா எடுக்கத்தான் கேட்டேன்.

@parveenyunus

பி.டி.ஆர்: அப்பா, கோவை மீட்டிங்ல முதலமைச்சர் கனவுல கட்சி ஆரம்பிச்சு காணாமப்போயிட்டாங்கன்னு சொன்னது கமல்ஹாசனை இல்லை. விஜயகாந்த்தைத்தான். நீங்க போட்டுக் குழப்பிக்காதீங்க.

@balasubramni1

பி.டி.ஆர்: தம்பி... அந்த நீட் தேர்வு ரத்து ரகசியம் என்னன்னு சொல்லுங்களேன்..?

உதயநிதி: கல்வி உரிமை மறுக்கப்படும்போது, எதிர்ப்புக் குரல் கொடுப்பதுதான் அந்த ரகசியம்.

மூர்த்தி (மைண்ட் வாய்ஸ்): ம்க்கும்... இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.

@ParveenF7

மூர்த்தி (மைண்ட் வாய்ஸ்): அமெரிக்காவுல சிலிக்கான் வேலி பேங்க்தானே திவால் ஆகியிருக்கு. என்னமோ நாமல்லாம் பணம் போட்டுருக்கிற ஸ்விஸ் பேங்க் திவாலான மாதிரி சின்னவர் சோகமாயிருக்காரே?

@ParveenF7

பி.டி.ஆர்: ஏன் கவலையா இருக்கீங்க உதய்?

உதய்: ஆஸ்கர் விருதுக்கு நானும் சந்தானமும் ஆடின ‘வேணாம் மச்சான் வேணாம் இந்தப் பொண்ணுங்க காதலு’ பாட்டை அனுப்பாம விட்டுட்டோமேன்னு கவலையா இருக்கு.

@madakannu1

பி.டி.ஆர்: உங்க தலைவலிக்குக் காரணம்

ஆர்.எஸ்.எஸ்-தானே?

உதயநிதி: இல்லை... ஆர்.எஸ்.பாரதி.

@music4life_____

“என்ன தம்பி தலைவலியா?”

“ஆமாம் அங்கிள்... ரொம்ப நாள் கழிச்சு ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை கே டி.வி-யில பார்த்தேன். அதான்!

@RavindranRasu

பி.டி.ஆர்: நீங்கள் கொடுத்த திருவள்ளுவர் சிலையை பிரதமர் என்ன செய்திருப்பார்?

உதயநிதி: நல்ல விலைக்கு ஏதாவது ஒரு தனியார் நிறுவனத்திடம் விற்றிருப்பார்.

@LAKSHMANAN_KL

பி.டி.ஆர்: தம்பி... கண்வலியா?

உதயநிதி: ம்ஹூம்... தலைவலி.

பி.டி.ஆர்: தலையில்தானே கண் இருக்கு தம்பி?

உதயநிதி (மைண்ட் வாய்ஸ்): இதுக்கு தலைவலியே தேவலை..!

FACEBOOK

Sathia Moorthi

“மதுரையைப் பொறுத்தவரை ஒரு உறைக்குள் ஒரு கத்திதான் இருக்கணும்.”

“அட... அதைக் கத்திச் சொல்லாதீங்க. உறக்கத்துல இருக்குற எங்க பெரியப்பா முழிச்சுக்கப் போறாரு!”

Hemanth K Govindh

மூர்த்தி (மைண்ட் வாய்ஸ்): ஒருவேளை நம்ம பையன் கல்யாணத்துக்கு கலெக்‌ஷனான மொய்க் கணக்கு விவரங்களைத்தான் போட்டுக்கொடுக்குறாரோ?

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan