
ஆமாமா... தி.மு.க-வைக் காப்பாத்தணும்னா இந்தியாவுக்குத்தான் வாக்களிக்கணும்!
ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

@parveenyunus
ஸ்டாலின்: ஹலோ... ஜி ஸ்கொயர்னு ஒரு நிறுவனம் இருக்குதுன்னே
டி.வி-யில நியூஸ் பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். அதுகூட போய் தி.மு.க-வைச் சம்பந்தப்படுத்துனா எப்படி?
சபரீசன் (மைண்ட் வாய்ஸ்): அடேங்கப்பா... மாமா எடப்பாடியையே மிஞ்சுறாரே!
@KrishnaratnamVC
“ஏற்கெனவே 2G பிராப்ளம்... இப்ப,
G square பிராப்ளம்... நமக்கும் இந்த G-க்கும் ராசியே இல்லைபோல. இனிமே, எதிலும் இந்த G எழுத்து வராத மாதிரி பார்த்துக்கோங்க!”
@YavanaI
“என்னது... தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போயிடுச்சுனு பொதுமக்கள் சொல்றாங்களா... கோடைக்காலமா இருக்குறதால, கெட்டுப்போகாம இருக்க ஃப்ரிட்ஜ்ல பத்திரமா வெச்சுருக்கோம்னு அவங்ககிட்ட சொல்லிடுங்க.”
@saravankavi
ஸ்டாலின்: ஆமாமா... தி.மு.க-வைக் காப்பாத்தணும்னா இந்தியாவுக்குத்தான் வாக்களிக்கணும்!
உதயநிதி: ஐயோ அப்பா... பழக்க தோஷத்துல பழமொழி சொல்ற மாதிரி தலைகீழாச் சொல்றீங்க.
@saravankavi
உதயநிதி: அப்பா... பாத்து... பேசறதெல்லாம் ரெக்கார்ட் ஆகிடப்போகுது.
ஸ்டாலின்: இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதான் போனை அட்டெண்ட் பண்ணாமலேயே பேசறேன்.
@LAKSHMANAN_KL
“ஆமாங்க... அவங்க அண்ணாமலையை ‘ஓட்டு’ கேக்க அனுப்பின மாதிரி தெரியலை... தி.மு.க-காரங்க போனை ‘ஒட்டு’ கேக்க அனுப்பின மாதிரிதான் தெரியுது!”
@LAKSHMANAN_KL
“ஹலோ... சொல்லுங்க... என் மகனும் மருமகனும் பல துறைகளில் ‘ஆடிய’ விவகாரம், இப்படி ‘ஆடியோ’ விவகாரமா ஆகும்னு நானே எதிர்பார்க்கலைங்க.”
@Sivakum31085735
உதயநிதி: போன்ல யாருப்பா?
ஸ்டாலின்: ஒண்ணுமில்லை உதய்... நீட் தேர்வு ரகசியம் மாதிரி, மது விலக்கு ரகசியம் எதுவும் இருக்கான்னு கேட்குறாங்க.
@Kirachand4
உதயநிதி: அந்த ஆடியோயோல உண்மை இருக்கா, இல்லையா டாடி?
ஸ்டாலின்: உண்மை இருக்கோ, இல்லையோ... அது முக்கியம் இல்லை... 30,000 கோடி இருக்கா, இல்லையா... அதுதான் இப்ப ரொம்ப முக்கியம்!
Sathia Moorthi
“ஹலோ... என்னாது... கல்யாண மண்டபத்துல கஞ்சா சப்ளை செய்ய அனுமதி கொடுக்கணுமா...இதெல்லாம் ரொம்ப ஓவர்ங்க!”
Sathia Moorthi
“நாமே சட்டம் கொண்டுவந்து, நாமே அதை நிறுத்திவெச்சு, அதுக்கு நாமே பாராட்டுவிழாவும் நடத்திக்கணும்... புரியுதா... இதுதான் அரசியல்!”
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.
Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan