அரசியல்
Published:Updated:

போட்டோ தாக்கு

சீமான்
பிரீமியம் ஸ்டோரி
News
சீமான்

``வேற ஒண்ணுமில்லை தம்பி... அர்னால்டுக்கு ‘பாடி பில்டப்’ மறந்துபோச்சாம். அண்ணனை வீடியோ எடுத்து அனுப்பச் சொன்னாரு. அதுக்காகத்தான் இது... புஹாஹா..!’’

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

சீமான்
சீமான்

TWITTER

@parveenyunus

“பேனா சிலையை உடைக்க இந்த வொர்க்அவுட் போதும்னு நினைக்கிறேன்.”

@absivam

“கர்நாடகத் தேர்தல்ல நான் நின்னுருந்தா, இந்த மாதிரி காவிரியைக் கையோட இழுத்து இணைச்சுவிட்டுருப்பேன்.”

@absivam

“நாடாளுமன்றத் தேர்தலுக்குள்ள சிக்ஸ் பேக் வெச்சுடுவேன்.”

“எதுக்குண்ணே?”

“ஆமா... தேர்தல்ல பலத்தைக் காட்டணும்ல!”

@YavanaI

``தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை, ‘வீட்டு வாடகை’!’’

@LAKSHMANAN_KL

`` ‘வவுனியா காட்டு வாலிபன்’ படத்தில் நடிக்கிறதுக்காகத்தான் இந்தப் பயிற்சி.’’

@Sivakum31085735

``வேற ஒண்ணுமில்லை தம்பி... அர்னால்டுக்கு ‘பாடி பில்டப்’ மறந்துபோச்சாம். அண்ணனை வீடியோ எடுத்து அனுப்பச் சொன்னாரு. அதுக்காகத்தான் இது... புஹாஹா..!’’

@Sivakum31085735

``ஆமைக்கதை சொல்லிக்கிட்டே அசால்ட்டா இருந்துட்டோம். இப்போ பாருங்க... `அண்ணன் பிரபாகரன் உயிரோட இருக்காரு’ன்னு சொல்லி நம்மையும் மிஞ்சிட்டாங்க.’’

@sarathitup4

``தம்பி தனுஷ் நடிக்கும் ஆங்கிலப் படத்துக்கு முதல்ல என்னைத்தான் கூப்பிட்டாங்க. அது தமிழ்த் தேசியத்துக்கு ஒத்து வராதுன்னு மறுத்துட்டேன்.’’

@YavanaI

``போட்டோவுக்கு போஸ் கொடுக்குற விஷயத்துல நான் சீமான் இல்லை... ‘ஜீ’மான்..!’’

FACEBOOK

Kavi Chennappan

“ஆமைக்கறி வாசனை வந்துடுச்சு... இதோட பயிற்சியை முடிச்சுக்க வேண்டியதுதான்.”

R Natarajan Adv

“இந்த எளிய தமிழ்ப்பிள்ளையால இந்த மாச உடற்பயிற்சிக்கூடக் கட்டணத்தைக்கூட கட்ட முடியலேயே... என்ன ஆட்சி இது... என்ன தேசம் இது?”

Kstalin Kannan

“உடல் என்னோடது... இந்த ஜிம் ஒரு நண்பரோடது.”

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan