சமூகம்
அலசல்
அரசியல்
Published:Updated:

போட்டோ தாக்கு

ஸ்டாலின், ஆர்.என்.ரவி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின், ஆர்.என்.ரவி

மிழகத்துல சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, எங்கு பார்த்தாலும் வெடிகுண்டு கலாசாரம் பரவுவதற்கு இதுவே சாட்சி!

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

ஸ்டாலின், ஆர்.என்.ரவி
ஸ்டாலின், ஆர்.என்.ரவி

TWITTER

@parveenyunus

ஸ்டாலின்: இந்தப் புத்தகத்தைப் படிப்பீங்களா?

ரவி: நிச்சயமா... மசோதாவை மட்டும்தான் கிடப்புல போடுவேன்!

@LAKSHMANAN_KL

ரவி: இது `கேரளா ஸ்டோரி’யா?

ஸ்டாலின்: ம்ஹூம்... இது `சீமான் ஸ்டோரீஸ்.’

@absivam

ஆளுநர்: என்ன இது... உங்க கட்சியோட ஊழல் பட்டியலா?

முதல்வர்: இல்லை... உங்களோட இந்த மாதச் செலவு ரிப்போர்ட்.

@absivam

முதல்வர்: அணுகுண்டு ஒரு முறைதான் வெடிக்கும்; புத்தகம் திறக்கும்போதெல்லாம் வெடிக்கும்.

ஆளுநர்: தமிழகத்துல சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, எங்கு பார்த்தாலும் வெடிகுண்டு கலாசாரம் பரவுவதற்கு இதுவே சாட்சி!

@saravankavi

ரவி: என்ன புத்தகம் இது?

ஸ்டாலின்: ‘சிக்கனமாகத் தேநீர் விருந்து அளிப்பது எப்படி?’

@Sivakum31085735

“என்ன ஸ்டாலின் ஜி... இந்த புக்குலயாவது ‘நீட் தேர்வு ரகசியம்’ இருக்கா?”

@sarathitup4

“உங்க பார்ட்னர் இருபதாயிரம் புக்ஸ் படிச்சிருக்காராம். நீங்க இந்த ஒரு புக்காவது படிங்க ஜி!”

FACEBOOK

Soma Sundaram

“ `திராவிட மாடல் காலாவதியாகிவிட்டது’ன்னு சொன்னீங்கல்ல... அதான் Renewal பண்ணிக் கொண்டாந்திருக்கேன். பிடிங்க... படிங்க..!”

Kavi Chennappan

ரவி: புத்தகத்தின் நடுவுல ஆங்காங்கே துண்டுச்சீட்டு இருக்கே?

ஸ்டாலின்: இது என்னுடைய வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் ஜி!

Mannargudi Rajagopal

“இந்தாங்க... எதிர்க்கட்சிகள் ஆட்சியிலிருக்கும் மாநிலங்களிலெல்லாம் ஆளுநர்கள் செய்யும் அட்டகாசத்தை விளக்கும் அருமையான புத்தகம்... பேரு ‘கவர்னர் ஸ்டோரீஸ்.’

Mannargudi Rajagopal

“ஆளுநர் மாளிகைச் செலவுகளை அதிரடியாகக் குறைப்பது எப்படி?’ங்கிற புத்தகம்...

நம்ம பி.டி.ஆர் எழுதியது!”

Kavi Chennappan

ரவி: புத்தகம் ‘வெயிட்’டா இருக்கே!

ஸ்டாலின்: டாஸ்மாக் வருமானத்துல வாங்கினது ஜி!

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.