அரசியல்
அலசல்
Published:Updated:

போட்டோ தாக்கு

அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
News
அண்ணாமலை

நான் பா.ஜ.க-வில் இருப்பதால் என்னைக் கோழை என்றோ, பச்சோந்தி என்றோ யாரும் எண்ணிவிட வேண்டாம்.

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு
போட்டோ தாக்கு

FACEBOOK

@absivam

“அண்ணாமலையாகிய நான்... அமைச்சர்களுடைய போன்களை ஒட்டுக்கேட்பேன் என்றும், காங்கிரஸுக்காக ஓட்டுக் கேட்பேன் என்றும் உளமார உறுதி கூறுகிறேன்!”

@LAKSHMANAN_KL

``அடுத்தடுத்து... அஞ்சு தேர்தல்ல தோத்து... சீக்கிரமே ஆளுநர் ஆவேன்... இது சத்தியம்!’’

@Vicky_dmktn

``அண்ணாமலையாகிய நான் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முதல்வராக இன்று முதல் என் கனவில் பதவி ஏற்கிறேன்...’’

@Marx84192519

``இனி, நட்டு சரியில்லைன்னு கதவைத் திறக்கவோ...

மெட்டு சரியில்லைன்னு பாட்டை நிறுத்தவோ...

மாட்டேன்... மாட்டேன்... இது உறுதி!’’

@raasangandhi

``உன்னுடன் நான் இருந்து செய்யும் ‘காரியம்’ மிக பயங்கரமான ஒன்றாக இருக்கும்!’’

@Sivakum31085735

``வாட்ச் கட்டுனாத்தானே பில் கேட்பீங்க... வளையத்துக்கெல்லாம் பில் கேட்க மாட்டீங்களே...’’

@Samy22384036

``இனி பஞ்சாயத்து தேர்தலில்கூட பிரசாரத்துக்குச் செல்ல மாட்டேன் என உறுதி கூறுகிறேன்.’’

TWITTER

Hemanth K Govindh

“பா.ஜ.க-வை கூப்பில் கொண்டு போய் நிறுத்தும் வரை ஓய மாட்டேன் என்று சபதமேற்கிறேன். ஜெய் பஜ்ரங்பல்லி!”

C P Senthil Kumar

``பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி தமிழகத்தில் ஏற்பட்டால், நான் பதவி விலகுவேன் எனச் சத்தியம் செய்தது தவறுதான். இனி சத்தியமாக எந்தச் சத்தியமும் செய்ய மாட்டேன்... இது சத்தியம்!’’

Uma Shankar

``அடுத்து ராஜஸ்தானில் நடக்கவிருக்கும் தேர்தலில், பி.ஜே.பி-யின் தேர்தல் பொறுப்பாளராக என்னை நியமிக்கவேண்டி போராட்டம் நடத்திய அனைவருக்கும்... குறிப்பாக ராகுல் அண்ணாவுக்கு நன்றி!’’

Saravanan M

``நான் பா.ஜ.க-வில் இருப்பதால் என்னைக் கோழை என்றோ, பச்சோந்தி என்றோ யாரும் எண்ணிவிட வேண்டாம். இருக்கின்ற கட்சியிலேயே, இருக்கின்ற மேடையில் இருந்துகொண்டே எதிர்க்கட்சியை ஜெயிக்க வைக்கும் தைரியமும் தன்னம்பிக்கையும் இந்தியாவிலேயே எனக்கு மட்டும்தான் இருக்கிறது என்று கூறிக்கொள்கிறேன்...’’

Rajasingh Jeyakumar

``இனி கர்நாடகாவிலும் ஊழல் பட்டியல் வெளியிடவேண்டியிருப்பதால், நான் ரொம்ப பிஸி!’’

முகம்மது தௌபீக்

``கர்நாடகா ஆளுநர் பதவி தந்தால் காங்கிரஸைக் கலங்கடித்துக் காட்டுவேன். இது சத்தியம்.’’

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.