
“இன்னும் சிறிது நேரத்தில் இருவரும் எம்.ஜி.ஆர் கெட்டப்பில் தோன்றுவார்கள். மக்கள் யாருக்கு அதிக மதிப்பெண்கள் அளிக்கிறார்களோ அவர்களுக்கே அந்த நாற்காலி என்பதை...”
ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

@parveenyunus
ஓ.பி.எஸ் (மைண்ட் வாய்ஸ்): நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும்போலே... நான் நிலவுபோல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே!
@YTLshankar
இ.பி.எஸ் (மைண்ட் வாய்ஸ்): கட்சிக்கு ADMK-ன்னு பேரு இருக்குற வரைக்கும் இவர் இங்க வந்துட்டுதான் இருப்பாருபோல. கூடிய சீக்கிரமே EDMK-ன்னு (Edappadi DMK) மாத்திடணும்!
@LAKSHMANAN_KL
இ.பி.எஸ்: மிக்ஸர் வேணுமாண்ணே?!
ஓ.பி.எஸ்: ஏற்கெனவே நீங்க கொடுத்த அல்வாவே போதும் பாஸ்..!
@rishivandiya
“இன்னும் சிறிது நேரத்தில் இருவரும் எம்.ஜி.ஆர் கெட்டப்பில் தோன்றுவார்கள். மக்கள் யாருக்கு அதிக மதிப்பெண்கள் அளிக்கிறார்களோ அவர்களுக்கே அந்த நாற்காலி என்பதை...”
@LAKSHMANAN_KL
ஓ.பி.எஸ்: வாங்க... அ.தி.மு.க-வின் புதிய எம்.ஜி.ஆரே..!
இ.பி.எஸ்: என்னதான் ஐஸ் வெச்சாலும்... எனக்கு எப்பவுமே நீங்க நம்பியார்தான்..!
@sarathitup4
ஓ.பி.எஸ்: கர்நாடகாவுல பா.ஜ.க தோல்விக்குக் காரணமே நாங்க வாபஸ் வாங்கினதுதான்!
இ.பி.எஸ்: இவர் காமெடி பண்றாரா, இல்லை சீரியஸா பேசறாரான்னே தெரியலையே!
Uma Shankar
இ.பி.எஸ் (மைண்ட் வாய்ஸ்): இருக்குற எல்லா 2,000 ரூபாய் நோட்டையும் நாம மாத்திடலாம்னு பார்த்தா, நமக்கு முன்னாடி இவரு வந்து உட்கார்ந்திருக்காரே..!
VKarthik
ஓ.பி.எஸ்: விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லை!
இ.பி.எஸ்: அப்புறம் என்ன...
அ.தி.மு.க-வை விட்டுக்கொடுத்துட்டுப் போகவேண்டியதுதானே?!
Gopi Varathan
ஓ.பி.எஸ் (மைண்ட் வாய்ஸ்): இதைத்தான் பெரியவங்க Chair (சேரிடம்) அறிந்து Chair-னு (சேர்)சொல்லியிருக்காங்க!
Saravanan M
இ.பி.எஸ்: எல்லாத்தையும் மேல இருக்குறவன் பார்த்துக்குவான்..!
ஓ.பி.எஸ்: ம்க்கும்... எல்லாத்தையும் மேலே இருக்குறவன் பார்த்துக்கிட்டு மட்டும்தான் இருக்கான்!
Sibichander Dhanaraj
“நம்ம எஜமான் அமித் ஷா வரட்டும்... பிறகு பேசலாம்!”
Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.