Published:Updated:

போட்டோ தாக்கு

போட்டோ தாக்கு
பிரீமியம் ஸ்டோரி
போட்டோ தாக்கு

நீங்க ஒரு சாயல்ல பெரியார் மாதிரியும், இன்னொரு சாயல்ல திருவள்ளுவர் மாதிரியும் தெரியுறீங்க ஜி

போட்டோ தாக்கு

நீங்க ஒரு சாயல்ல பெரியார் மாதிரியும், இன்னொரு சாயல்ல திருவள்ளுவர் மாதிரியும் தெரியுறீங்க ஜி

Published:Updated:
போட்டோ தாக்கு
பிரீமியம் ஸ்டோரி
போட்டோ தாக்கு

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

Laks Veni

மோடி: தமிழ்நாட்டில் இன்னும் அஞ்சு இடங்களில் எய்ம்ஸ் கொண்டுவர முடிவுபண்ணிட்டேன்... அடிக்கல் நாட்ட, உடனே அஞ்சே அஞ்சு செங்கல்லை மட்டும் ரெடி பண்ணுங்க... போதும்!

A S Natarajan

பன்வாரிலால்: நீங்க ஒரு சாயல்ல பெரியார் மாதிரியும், இன்னொரு சாயல்ல திருவள்ளுவர் மாதிரியும் தெரியுறீங்க ஜி...

மோடி: கெட்டப் எப்படி இருந்தாலும், தமிழ்நாட்டுல நம்ம செட்டப் எடுபட மாட்டேங்குதே!

துடுப்பதி வெங்கண்ணா

மோடி: இவங்களைப் பத்தி ஸ்டாலின் கொடுக்குற புகார் மனுவையெல்லாம் வாங்கி பத்திரமா வைங்க... சமயத்தில் உதவும்!

Srikanthan Radhakrishnan

மோடி: நீங்க ஏன் என்னை மாதிரி தாடி வளர்த்துக்கக் கூடாது?

பன்வாரிலால்: ஏன் உங்களுக்கு என்மேல கொலைவெறி? `ஆட்டுக்கு தாடியும், மாநிலத்துக்கு கவர்னரும் வேண்டாம்’னு அண்ணா சொன்னதை நினைவுபடுத்தின மாதிரி ஆகிடாதா?

Ravikumar Krishnasamy

மோடி: இவங்க ரெண்டு பேரையும் நான் சொல்லும்போதெல்லாம் கவர்னர் மாளிகைக்குக் கூப்பிட்டு, ஒரு மணி நேரம் வெச்சிருந்து அனுப்புங்க... மீதியை நான் பார்த்துக்கிறேன்!

Ambai Deva

“மீட்டிங் கேட்க நல்ல கூட்டம் வந்திருக்கே!”

“அப்பிடி நினைச்சு நம்பிடாதீங்க ஜி... எல்லாம் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்!”

TWITTER

@RavindranRasu

மோடி: பெட்ரோல் விலையை அஞ்சு பைசா ஏத்துனா தப்பா?

பன்வாரிலால்: இல்லைங்க ஜி!

மோடி: அஞ்சு நாளைக்கு அஞ்சு பைசா ஏத்துனா?

பன்னீர்: தப்பு மாதிரி தெரியுதுங்க ஜி!

மோடி: அஞ்சு தடவ அஞ்சு நாளைக்கு அஞ்சு அஞ்சு பைசாவா ஏத்துனா?

எடப்பாடி: தப்புதாங்க ஜி!

மோடி: ஆனா, நம்ம நாலு பேருக்கும் நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை!

@krishmaggi

“பில்டப் பண்றமோ பீலா விடுறமோ அது முக்கியம் இல்ல... நாம எது பண்ணாலும் இந்த உலகம் நம்மள உடனே உத்துப்பாக்கணும்!”

@LAKSHMANAN_KL

மோடி: இவங்க ரெண்டு பேரும் பம்மி நிக்கிறதைப் பார்க்கும்போது, ஆரம்ப காலங்கள்ல அத்வானி முன்னால நான் நின்னது ஞாபகத்துக்கு வருது..!

@poonasimedhavi

ஓ.பி.எஸ்: இங்க அம்மா சமாதியை மூடிட்டாங்க அய்யா. அதனால வாஜ்பாய் சமாதிக்கு வந்து தர்மயுத்தம் நடத்த பர்மிஷன் கொடுத்தீங்கன்னா நல்லாயிருக்கும்!

@RamAathiNarayen

மோடி: என்னது... நான் மாஸ்க் போடணுமா? நான் தடுப்பூசியே இன்னும் போட்டுக்கலை... கை தட்டி, விளக்கேத்தினா கொரோனா போயிடும். போங்க!

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism