
இனிமே பேசாம கட்சியைக் கலைச்சுடுவோம் விஜயகாந்த் சார்!
ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

Mani Pmp
விஜயகாந்த்: என்னை ஏமாளி ஆக்கிட்டாங்க...
தினகரன்: என்னை குக்கர் வித் கோமாளி ஆக்கிட்டாங்க!
Varadharajan Arunachalam
விஜயகாந்த்: ‘மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்கலாமா?’ங்கற பழமொழிக்கு இணையா,
‘குக்கரை நம்பி கூட்டணிவெக்கலாமா?’னு புதுமொழி படைச்சிட்டீங்களே தினகரன்.
Ayyan M Akasnandan
தினகரன்: இனிமே பேசாம கட்சியைக் கலைச்சுடுவோம் விஜயகாந்த் சார்!
விஜயகாந்த்: கூட்டணியை வேணா கலைச்சுடுவோம் தினகரன். கட்சியைக் கலைக்கிறதைப் பத்தி
என் மச்சினன், மனைவிகிட்டதான் பேசணும்!
Uzhavan Navaneetha Krishnan
தினகரன்: அண்ணியார் கையால ஒரு கப் காபி குடிக்கலாம்னு வந்தேன் கேப்டன்...
விஜயகாந்த்: காபி என்ன காபி... அண்ணியார் உங்களுக்கு பாயசமே போடலாம்னுதான் இருக்காங்க!
Suyambulingam Olaganathan
தினகரன்: கோவில்பட்டி மக்களிடம் ‘கடலை மிட்டாய்’ கேட்டேன். இப்படி ‘அல்வா’ கொடுத்துட்டாங்களே!
Ravikumar Krishnasamy
விஜயகாந்த்: குக்கர்ல பருப்பு வேகலைபோல!
தினகரன்: முரசுலகூடத்தான் சத்தம் வரலை... நான் கேட்டேனா?
@LAKSHMANAN_KL
டி.டி.வி.தினகரன்: அடுத்த தேர்தல்ல உங்க கட்சிக்கு எத்தனை சீட் வேணும் கேப்டன்?
விஜயகாந்த்: டெபா`சீட்’!
@RajaAnvar_
கேப்டன்: நாங்க அ.தி.மு.க-வோட கூட்டணில இருந்திருந்தா...
தினகரன்: தி.மு.க-வுக்கு இன்னும் நாலு சீட் கிடைச்சிருக்கும்!
@San8416
டி.டி.வி: அடுத்த தேர்தல்ல கண்டிப்பா நம்ம கூட்டணி ஜெயிக்கும் கேப்டன்...
கேப்டன்: அட போங்க தம்பி... என் கட்சி எப்ப, யார்கூட கூட்டணியில இருக்குதுனு எனக்கே தெரியாது, நீங்க வேற!
@saravankavi
கேப்டன்: நீங்க மட்டும் எப்படிக் கூட்டணிக்கு ஒத்துக்கிட்டீங்க?
டி.டி.வி: ரிசல்ட் வந்தால் துணைக்கு ஆள் வேணும்னுதான்...
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.
Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan