Published:Updated:

போட்டோ தாக்கு

குஷ்பு, எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
News
குஷ்பு, எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன்

மக்கள் நீதி மய்ய துணைத் தலைவர் பதவி காலியா இருக்காமே?

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

FACEBOOK

Krishna Moorthy

பொன்.ரா: தம்பி... தேர்தல் தோல்விக்குப் பிறகு வெளியில தலை காட்ட முடியலை... ‘மாஸ்க்’ போட்டு மறைஞ்சு மறைஞ்சு போறேன்.

முருகன்: அட... நீங்களாவது பரவாயில்ல அண்ணே... நான் PPE கிட் போட்டுக்கிட்டுப் போறேன்!

மூ.மோகன்

பொன்.ராதா: எனக்கு இன்னும்கூட ஒண்ணு விளங்கவே மாட்டேங்குது!

எல்.முருகன்: எப்படி இவ்வளவு இடத்துல தோத்துப்போனோம்னா?

பொன்.ராதா: ம்ஹூம்... எப்படி நாலு தொகுதியில ஜெயிச்சோம்னு!

Maha Kavi Priyan

பொன்னார்: மக்கள் நீதி மய்ய துணைத் தலைவர் பதவி காலியா இருக்காமே?

முருகன்: மெதுவா பேசுங்க... குஷ்பு காதுல விழுந்துடப் போகுது!

Ambai Deva

பொன்னார்: தோற்றுப்போனதை நினைச்சு கவலைப்படுறீங்களா?

முருகன்: இல்லண்ணே, ஜெயிச்ச அந்த நாலு பேரும் நம்மை மதிக்க மாட்டாங்களே...

அதை நினைச்சாதான் வேதனையா இருக்கு!

Sanjeevi Bharathi

முருகன்: தலைவர் பதவியிலருந்து தூக்கிடுவாங்களோனு பயமா இருக்கு...

பொன்னார்: கவர்னர் பதவி வாங்கிட்டு செட்டிலாயிட வேண்டியதுதான்!

குஷ்பு: அடுத்து கமல் கட்சிக்குப் போகலாமா, சீமான் கட்சிக்குப் போகலாமானு குழப்பமா இருக்கு...

TWITTER

@JaNeHANUSHKA

பொன்னார்: அ.தி.மு.க-காரங்க 65 சீட் ஜெaயிச்சுருக்காங்க... மீட்டிங் போட்டு தலைவர் தேர்வு செய்யறதுல நியாயம் இருக்கு. நாலு சீட் ஜெயிச்சிருக்குற நமக்கு இந்த மீட்டிங் தேவையா?

@LAKSHMANAN_KL

பொன்னார்: மோடி ஜி, அமித்ஷா ஜி, யோகி ஜி... எல்லாரும் பிரசாரத்துக்கு வந்ததுதான் நாலு தொகுதியில நாம ஜெயிச்சதுக்குக் காரணம்!

முருகன்: 16 தொகுதியில தோத்ததுக்கும் அதுதான் காரணம் ஜி!

@absivam

முருகன்: எட்டு... எட்டு... அஞ்சு... ஒன்பது... மூணு...

பொன்னார்: என்ன போன் நம்பரா?

முருகன்: அட... நான் வாங்கின ஓட்டு ஜி.

@Vkarthik_puthur

பொன்னார்: பாவம் குஷ்பு மேடம், தோல்வியை நினைச்சு ரொம்ப வருத்தப்படுறாங்க...

எல்.முருகன்: நம்ம கட்சியில சேர்ந்துட்டு தோல்வியை நினைச்சு வருத்தப்பட்டா அப்புறம் நம்ம கட்சிக்கு என்ன மரியாதை?!

@JaNeHANUSHKA

முருகன்: அரசு வழிமுறைகளின்படி 50 பேருக்கும் குறைவாவெச்சு கூட்டம் நடத்துற நமக்கு ஏதாவது பரிசு கொடுப்பாங்களா அண்ணே!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.