அலசல்
Published:Updated:

போட்டோ தாக்கு

ஓ.பன்னீர்செல்வம்,  எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி

“நீங்க எதிர்க்கட்சித் தலைவரான நேரம், அ.தி.மு.க-தான் எதிர்க்கட்சிங்கறதையே எல்லாரும் மறந்துட்டாங்க

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@LAKSHMANAN_KL

இ.பி.எஸ் (மைண்ட் வாய்ஸ்): சின்னம்மா வரப்போறதா சொல்றாங்களே... பேசாம

‘அ.தி.மு.க-வும் அ.ம.மு.க-வும் ஒண்ணு, இதை அறியாதவன் வாயில மண்ணு’ன்னு ஒரு அறிக்கை விட்டுரலாமா..?!

@San8416

OPS: “நீங்க எதிர்க்கட்சித் தலைவரான நேரம்,

அ.தி.மு.க-தான் எதிர்க்கட்சிங்கறதையே எல்லாரும் மறந்துட்டாங்க!”

EPS: “அதாவது பரவால, நீங்க எந்தக் கட்சிங்கறதையே மறந்துட்டாங்க!”

@JaNeHANUSHKA

இ.பி.எஸ் (மைண்ட் வாய்ஸ்): ஆளுங்கட்சிகூட நல்ல பழக்கத்துல இருக்காரு. இவர் மூலமாவே டெண்டர்களை நம்ம சம்பந்திக்கு வாங்கிக் கொடுத்துடணும்!

@LAKSHMANAN_KL

ஓ.பி.எஸ் (மைண்ட் வாய்ஸ்): ‘வெற்றி நடை, வீர நடை’ன்னு என்னா ஆட்டம் போட்டாரு... கடைசியில மனுஷன் முகத்தில் புன்னகைகூட ‘தவழ’ முடியாமப்போயிடுச்சே!

FACEBOOK

Baskar Srinivas

ஓ.பி.எஸ்: முன்னாள் முதல்வர், முன்னாள் துணை முதல்வர், முன்னாள் அமைச்சர்னு ஆகிட்டே வர்றேன். முன்னாள் எம்.எல்.ஏ-னு ஆகாமப் பார்த்துக்கணும்!

Vaira Bala

இ.பி.எஸ் (மைண்ட்வாய்ஸ்): முன்னாடியே ராமதாஸ் சொன்னதுபோலத் தமிழ்நாட்டைப் பிரிச்சிருந்தா... இப்ப கொங்கு மண்டலத்துக்கு நாம முதலமைச்சரா இருந்திருக்கலாம். ம்... நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டோமே!

Uzhavan Navaneetha Krishnan

இ.பி.எஸ் (மைண்ட்வாய்ஸ்): சின்னம்மா கட்சியை சரிபண்ணிடலாம்னு சொல்லுறாங்க.

அ.தி.மு.க-வையா இல்ல அ.ம.மு.க-வையான்னு தெரியாம ஒரே குழப்பமா இருக்கே.

C P Senthil Kumar

இ.பி.எஸ்: அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தரப் பகைவரும் இல்லை!

ஓபிஎஸ்: ஆனா நிரந்தரத் தலைவலி உண்டு!

Ravindran Kannan

இ.பி.எஸ்: போகிற போக்கைப் பார்த்தா, உட்கட்சி சண்டையில தமிழக காங்கிரஸையும் மிஞ்சிடுவோம் போலிருக்கே!

Harithranadhi Raja

ஓ.பி.எஸ் (மைண்ட் வாய்ஸ்): சசிகலா ஆடியோவை இவரும் கேட்ருப்பரோ...?!

இ.பி.எஸ் (மைண்ட் வாய்ஸ்): சசிகலா ஆடியோவை இவரும் கேட்ருப்பாரோ?!

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.