Published:Updated:

போட்டோதாக்கு

ராகுல்காந்தி - ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ராகுல்காந்தி - ஸ்டாலின்

மோடி அலை, ஸ்டாலின் அலையெல்லாம் வந்துடுச்சு. இனி ‘ராகுல் அலை’தான் பாக்கி!

போட்டோதாக்கு

மோடி அலை, ஸ்டாலின் அலையெல்லாம் வந்துடுச்சு. இனி ‘ராகுல் அலை’தான் பாக்கி!

Published:Updated:
ராகுல்காந்தி - ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ராகுல்காந்தி - ஸ்டாலின்

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோதாக்கு

TWITTER

@Kirachand4

அழகிரி: 2024 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணையணும் ஜி...

ராகுல்: முதல்ல நம்ம கட்சியில நாம அனைவரும் ஒன்றிணையணும் ஜி...

@LAKSHMANAN_KL

கே.எஸ்.அழகிரி (ராகுலிடம்): நாம ‘கை’ கொடுக்கப் போய்தான் தேர்தல்ல தி.மு.க ஜெயிச்சிருக்கு..!

ஸ்டாலின் (வீரமணியிடம்): இன்னும் எத்தனை தேர்தலுக்குத்தான் இந்த காங்கிரஸ் கட்சியைக் `கை’த்தாங்கலா கூட்டிட்டுப் போகணும்னு தெரியலை ஐயா!

@San8416

அழகிரி: ராகுல் ஜி, நாம ஆட்சிக்கு வந்தாலும் ‘ஒன்றிய அரசு’ன்னுதான் கூப்புடுவாங்களாம்!

ராகுல்: ‘வந்தா’ கூப்டுக்கட்டும்!

@RavindranKanna2

வீரமணி: காங்கிரஸ் கொள்கைகளில் உங்களுக்குப் பிடித்தது எது?

ஸ்டாலின்: வாரிசு அரசியல்தான்.

@absivam

கே.எஸ்.அழகிரி: மோடி அலை, ஸ்டாலின் அலையெல்லாம் வந்துடுச்சு. இனி ‘ராகுல் அலை’தான் பாக்கி!

ராகுல்: அதுக்குள்ள கொரானா 3-வது அலை வந்துடும்போலிருக்கே..!

FACEBOOK

Pasumpon Elango

ராகுல்: தமிழ்நாட்டுல ‘கொங்குநாடு’ மாதிரி... கேரளாவுல ‘வயநாடு’ கொண்டு வந்தா காங்கிரஸ் ஜெயிச்சுடுமா அழகிரி ஜி?

Rajasingh Jeyakumar

வீரமணி: ஒருவேளை கோஷ்டிக்கு இத்தனை சீட்டுன்னு கேட்டு வாங்கத்தான் பத்து கோஷ்டி, பன்னிரண்டு கோஷ்டின்னு கதைவிடுறாங்களோ?

ஸ்டாலின்: அத்தனை சாமர்த்தியம் இருந்தா ஆட்சிக்கு வந்திருக்க மாட்டாங்களா?

M Peter Francisca

அழகிரி: புதுசா கொங்கு நாடுன்னு ஒண்ணு...

ராகுல்: அங்கே நமக்கு எத்தனை கோஷ்டி இருக்கு?

Sanjeevi Bharathi

அழகிரி: உள்ளாட்சித் தேர்தலில் எப்படிக் கேட்கலாம்?

ராகுல்: கொடுக்கறதை வாங்கிக்குங்க... ஆனா, இந்தவாட்டி அழக் கூடாது!

M Peter Francisca

ராகுல்: நம்ம கட்சிக்காரங்க யாரையும் காணோமே ஏன்?

அழகிரி: உங்களுக்கு யார் தலைமையில் வரவேற்பு கொடுக்கறதுன்னு கோஷ்டிப் பூசல் வந்திருக்கும் ராகுல் ஜி... அந்தப் பக்கமா அடிச்சுக்கிட்டு நிப்பாங்க!

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism