ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!
Rathinavel Pandian
ரா.பா: சின்னம்மாவுக்கு நானே போனைப் போட்டுப் பேசலாம்னு இருக்கேன்!
கடம்பூர்: எதுக்கு?
ரா.பா: பெங்களூரு ஜெயில்ல வசதிகள்லாம் எப்படி இருக்குன்னு சும்மா தெரிஞ்சுக்கத்தான்!
Vaira Bala
விஜயபாஸ்கர்: என் வீட்டுக்கு ரெய்டு வந்தா கூடுற கூட்டத்துக்கு ‘தடுப்பூசி இலவசம்’னு சொல்லியிருக்கேன்!
ராஜேந்திர பாலாஜி: ‘நான் பால்கோவா இலவசம்’னு சொல்லியிருக்கேன்!
(கடம்பூரார் எதை இலவசமாகக் கொடுப்பதென கடுமையாக யோசிக்கிறார்)
@Kirachand4
ரா.பாலாஜி: ரெய்டு வந்துருமோன்னு பயமா இருக்கு...
விஜயபாஸ்கர்: ‘ஸ்வீட் எடு கொண்டாடு’ன்னு ஆடும்போது மட்டும் இனிச்சுச்சாக்கும்!
@RajaAnvar_Offic
ராஜேந்திர பாலாஜி: ஒன்றரை டன் ஸ்வீட் சாப்பிட்ட நானே ஜம்முனு இருக்கேன்... உங்களுக்கு எப்படி சுகர் வந்துச்சு விஜய பாஸ்கர்?
@IamUzhavan
ரா.பா: நல்ல சமையல் மாஸ்டர் இருந்தா சொல்லுங்கண்ணே!
க.ராஜு: வீட்ல ஏதாவது விசேஷமாண்ணே?
ரா.பா: அட நீங்க வேற... ரெய்டு நடக்கும்போது வீட்டு முன்னாடி கூடுற தொண்டர்களுக்குச் சாப்பாடு அரேஞ்ச் பண்ணணும்ல!
@NedumaranJ
விஜயபாஸ்கர்: சொந்தச் செலவுல சூனியம் வெச்சுக்கிட்டோம்!
ரா.பா: என்ன சொல்றீங்க டாக்டர்?
கடம்பூர் ராஜூ: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றணும்னு ஆளுங்கட்சிக்கு எதிரா நாம போராட்டம் பணணினோமே... ‘முன்னாள் அமைச்சர்கள்மீது விசாரணை’ங்கறது வாக்குறுதிகள்ல ஒண்ணு!
@RavindranRasu
கடம்பூர் ராஜூ: என்னண்ணே நீங்க
அ.தி.மு.க-விலிருந்து பா.ஜ.க-வுக்குப் போறதா பேசிக்கிறாங்களே?
ராஜேந்திர பாலாஜி: அப்ப நாம இப்ப இருக்கிறது பா.ஜ.க-வுல இல்லையா?!
@sarathitup4
ரா.பா: ரெய்டு அன்னிக்கு என்னென்ன அயிட்டம் போடணும்னு, மனு குடுக்கற மாதிரி தொண்டர்கள் மெனு குடுக்கறாங்கண்ணே!
@LAKSHMANAN_KL
விஜயபாஸ்கர்: இவ்ளோ நாளா கன்ட்ரோலுக்கு வராத நம்மளோட பி.பி., சுகரெல்லாம் இனி கன்ட்ரோலுக்கு வந்துரும்!
கடம்பூர் ராஜூ: எப்பிடி?
ராஜேந்திர பாலாஜி: இனிதான் கோர்ட்டு, கேஸுனு நடையா நடக்கப் போறோமே!
@LAKSHMANAN_KL
விஜயபாஸ்கர்: புரையேறிடுச்சு... யாரோ நெனைக்கிறாங்கனு நெனைக்கிறேன்!
ராஜேந்திர பாலாஜி: லஞ்ச ஒழிப்புத்துறையா இருக்கும் பாஸ்!
@madakannu1
ரா.பா: இருமுறாரா... தும்முறாரா..?
க.ராஜூ: தி.மு.க-வுக்குத் தாவிடலாமான்னு சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம நம்மளை மாதிரியே தவிக்கிறார்!
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.
Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan