Published:Updated:

போட்டோ தாக்கு

ராமதாஸ், ஜி.கே.மணி, அன்புமணி
பிரீமியம் ஸ்டோரி
ராமதாஸ், ஜி.கே.மணி, அன்புமணி

ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி மாறுவதால், பா.ம.க-வைப் பச்சோந்தி என்று நினைத்துவிடாதீர்கள்...

போட்டோ தாக்கு

ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி மாறுவதால், பா.ம.க-வைப் பச்சோந்தி என்று நினைத்துவிடாதீர்கள்...

Published:Updated:
ராமதாஸ், ஜி.கே.மணி, அன்புமணி
பிரீமியம் ஸ்டோரி
ராமதாஸ், ஜி.கே.மணி, அன்புமணி

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

FACEBOOK

Kavi Chennappan

“மரத்தை வெட்டலாம்... ஆனால், இப்படி ஒவ்வொரு தேர்தலப்பவும் மாமரத்தை வெட்டக் கூடாது மக்களே!’’

Vaira Bala

“யாருய்யா அது... வர்றது உள்ளாட்சித் தேர்தல்னுகூடத் தெரியாம ‘வருங்கால முதல்வரே... எதிர்காலப் பிரதமரேனு’ ஆரம்பிக்கிறது?!”

Laks Veni

ராமதாஸ்: தமிழகத்தை மூணா பிரிச்சா... அன்புமணி முதல்வராவது உறுதி!

ஜி.கே.மணி மைண்ட் வாய்ஸ்: முப்பதா பிரிச்சாக்கூட... அது நடக்குமாங்கிறது டவுட்டுதான்!

Kavi Chennappan

“கொடுத்த ஸ்வீட் பாக்ஸுகளுக்கான கான்ட்ராக்ட் முடிந்துவிட்டதால்தான் அ.தி.மு.க-விலிருந்து விலகிவிட்டோம் என்பதை...”

Rajasingh Jeyakumar

``கத்தாதீங்கப்பா...

ஒன்பது மாவட்டத்துலயும் உள்ளாட்சித் தேர்தலில் தனிச்சு நிக்கிறோமே தவிர,

அ.தி.மு.க-காரங்க மேல ரெய்டு வந்தா, போய் நல்லா சாப்பிட்டுட்டு போராட்டத்துல கலந்துக்கிறதுக்கெல்லாம் தடையில்லை!’’

Raja Gopal

ராமதாஸ்: நடிகர் பிரபு எனக்கு போன் பண்ணி, ‘எங்கப்பாவையே மறுபடி பார்த்ததுபோல இருக்கு’னு நெகிழ்ச்சியா பேசுறாரே எதுக்கு?

ஜி.கே.மணி: வன்னியர் இட ஒதுக்கீடு மசோதா வந்தப்போ, சின்னய்யா உங்ககிட்டே போன்ல விம்மி விம்மி அழுதாரே... அதைப் பாத்துட்டுதாங்கய்யா!

TWIITER

@chennappan10

“யாருப்பா அது... ‘தத்தித் தாவும் தலைவர்களே வருக வருக’னு கோஷம் போடுறது..!’’

@chennappan10

“ஒவ்வொரு தேர்தலுக்கும் கூட்டணி மாறுவதால், பா.ம.க-வைப் பச்சோந்தி என்று நினைத்துவிடாதீர்கள்... இருக்கிற இடத்தில், இருக்கிற நேரத்தில், அனைத்துக் கட்சிகளுடனும் மாறி மாறி கூட்டணி அமைக்கும் ஒரே கட்சி பா.ம.க-தான் என்பதைச் சற்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்!”

@Kirachand4

நிருபர்: ஆப்கனில் தாலிபன்கள் ஆட்சி அமைச்சுட்டாங்களே?

ராமதாஸ்: உலக அரங்கில் பா.ம.க-வுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது!

@San8416

ராமதாஸ்: நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை!

அன்புமணி: அப்பாடா... எந்த நாலு பேருக்குன்னு யாரும் கேட்கலை!

@IamUzhavan

நிருபர்: நாளைய அரசியலில் உதயநிதியும் அன்புமணியும் ஒரே கூட்டணியில் இருப்பார்களா?

ராமதாஸ்: அது நிதியைப் பொறுத்தது. அதாவது, உதயநிதியின் விருப்பத்தைப் பொறுத்ததுனு சொல்லவந்தேன்!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan