Published:Updated:

போட்டோ தாக்கு

நாம் ஆட்சி அமைப்போம்னு வள்ளுவருக்கு 2,000 ஆண்டுகளுக்கு முன்பே தெரிஞ்சிருக்கும்போல ஜி!

பிரீமியம் ஸ்டோரி

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

எல்.முருகன் - மோடி
எல்.முருகன் - மோடி

TWITTER

@SkSoundhar

மோடி: என்ன மேன் இது?

முருகன்: ‘டீ விற்பனை முதல் இந்தியா விற்பனை வரை’ புத்தகம் ஜி!

@balasubramni1

மோடி: இதென்ன புக்?

முருகன்: அடுத்த தேர்தலில் தோற்று, அமைச்சர் ஆகணும்னு ஆசைப்படுவோரின் பெயர் பட்டியல் ஜி!

@LAKSHMANAN_KL

முருகன்: ‘எண்ணெய், பருப்பு இல்லாமல் விதவிதமாக வடை சுடுவது எப்படி’ங்கிற சமையல் குறிப்புகள் அடங்கிய புத்தகத்தை உங்களுக்கு கிஃப்டா கொடுத்துட்டுப் போக வந்தேன் ஜி!

@Kirachand4

மோடி: ‘இடுக்கண் வருங்கால் நகுக’னு வள்ளுவர் ஏன் சொன்னார் முருகன் ஜி?

முருகன்: நாம் ஆட்சி அமைப்போம்னு வள்ளுவருக்கு 2,000 ஆண்டுகளுக்கு முன்பே தெரிஞ்சிருக்கும்போல ஜி!

@Vkarthik_puthur

மோடி: தமிழ் மொழி, கலாசாரத்துக்கு நான் மிகப்பெரிய அபிமானி தம்பி!

முருகன்: ஆமாமா... நீங்க ‘அம்பானி’, ‘அதானி’க்குக்கூட மிகப்பெரிய அபிமானினு தெரியும் ஜி!

@LAKSHMANAN_KL

முருகன்: என்ன ஜி... பி எம் கேருக்கு டொனேஷன் கொடுத்தவங்களோட லிஸ்ட் புக் இவ்ளோ சிறுசா இருக்கு?

மோடி: நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் தம்பி!

@absivam

மோடி: எனக்கு எதுக்குத் தேவையில்லாம கிஃப்ட்?

முருகன்: எனக்கு நீங்க தேவையில்லாம பதவி தரலையா... அது மாதிரிதான் வாங்கிக்கோங்க!

FACEBOOK

Ravikumar Krishnasamy

முருகன்: நம்ம ஆட்சியின் சாதனைகளைப் புத்தகமா போட்டிருக்கிறேன்!

மோடி: ஒண்ணுமே இல்லாததுக்குக்கூட புத்தகம் போட்டீங்க பாருங்க... இதுதான் சாதனை!

VKarthik

மோடி: கடல்சார் வளங்களைப் பாதுகாக்கணும் தம்பி!

எல்.முருகன்: புரிஞ்சிடுச்சு ஜி... கடல்சார் வளங்களைத் தனியாருக்கு விற்கப்போறீங்க அதானே!

Sathia Moorthi

மோடி: என்ன புத்தகம் இது?

முருகன்: ‘விதவிதமாக போட்டோவுக்கு போஸ் கொடுப்பது எப்படி?’ என்ற புத்தகம்... உங்களுக்கு உபயோகமா இருக்கும்!

Ravikumar Krishnasamy

எல்.முருகன்: இதுவரை நீங்க சுற்றிவந்த நாடுகளின் தொகுப்பு இந்தப் புத்தகம்!

மோடி: இதுவரை நான் போகாத நாடுகளின் தொகுப்பு கொடுங்க முருகன்...

முருகன்: அப்போ, வேற்று கிரகங்களைப் பற்றித்தான் எழுதணும்!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு